முகத்திற்கு பொலிவு தரும் விளக்கெண்ணெய்:
விளக்கெண்ணெயில்(castor oil) பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளது. விளக்கெண்ணெயின் பயன்கள் பற்றி பார்க்கலாம்.
1.விளக்கெண்ணையை காட்டன் பஞ்சில் நனைத்து முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். பின்பு குளிர்ந்த நீர் கொண்டு முகத்தை கழுவலாம். இவ்வாறு செய்து வர சருமத்திற்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.
2.விளக்கெண்ணெய்யில் இருக்கும் ரிகினோலிக் அமிலம் சருமத்தில் வீக்கம் ஏற்படாமல் தடுக்க பெரிதும் உதவும்.
3.சருமத்தில் ஏற்படும் தடிப்பு, சிவப்பு, அரிப்பு, பூஞ்சை தொற்றுகள் போன்ற பிரச்சனைகளை சரிசெய்ய விளக்கெண்ணெயுடன் சிறிதளவு தேங்காய் எண்ணெய் கலந்து தடவலாம்.
4.விளக்கெண்ணையை(castor oil) குளிப்பதற்கு முன் உடல் முழுவதும் தடவி பின்பு குளித்தால் சருமம் ஈரப்பதத்துடன் இருக்கும்.
5.விளக்கெண்ணெய் முகப்பருக்களை உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழிக்கும் தன்மை உடையது. முகப் பருக்களின் மீது விளக்கெண்ணெயை தடவி வந்தால் முகப்பருக்கள் அனைத்தும் நீங்கும்.
6.விளக்கெண்ணையை தூங்க செல்வதற்கு முன் கண்களை சுற்றி தடவி வந்தால் கண் எரிச்சல் குணமாகும்.
7.விளக்கெண்ணெய், ஆலிவ் எண்ணெய், எலுமிச்சைச்சாறு ஆகியவற்றை முடியின் வேர்க்கால்களில் தடவிவந்தால் பொடுகு நீங்கி முடி வளர்ச்சி அதிகரிக்கும்.
8.விளக்கெண்ணெயில்(castor oil) இருக்கும் ஓமேகா 9 கொழுப்புஅமிலம்(omega 9 Fatty acid) முடியின் அடர்த்தி மற்றும் முடி வளர்ச்சியை அதிகரிக்கும் தன்மை கொண்டது.
9.விளக்கெண்ணையை வாரம் ஒரு முறை தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் முடியில் உள்ள வறட்சி நீங்கி முடி நன்றாக வளரும்.
10.விளக்கெண்ணெய் தேங்காய் எண்ணெயுடன் கலந்து தலைக்கு தேய்த்து வர கூந்தல் பளபளப்பாகவும், மென்மையாகவும் மாறும்.
11.விளக்கெண்ணையை கண் இமைகளில் தடவி வந்தால் கண் இமைகள் அழகாக மாறும்.
12.பாதங்களில் வெடிப்பு உள்ளவர்கள் விளக்கெண்ணெயை தடவி வந்தால் வெடிப்புகள் சரியாகும்.