முடி கருமையாகவும் அடர்த்தியாகவும் வளர உதவும் கற்றாழை
கற்றாழை Aloevera என்ற பெயரில் பலராலும் அறியப்படுகிறது. கற்றாழையில் சோற்றுக் கற்றாழை, சிறு கற்றாழை,அன்னகழுத்து கற்றாழை, பெரும்கற்றாழை, பேய்க்கற்றாழை, கருங்கற்றாழை, ரயில் கற்றாழை எனப் பல வகைகள் உள்ளன.கற்றாழை கத்தாளை, குமரி, கன்னி என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது.
கற்றாழை எளிதாக வளரக்கூடியது. கற்றாழை மருத்துவ குணம் நிறைந்தது.கற்றாழையில் தளிர் பச்சை,இளம்பச்சை, கரும்பச்சை என மூன்று வகை நிறங்கள் உண்டு.
கற்றாழை மடல்களில் ஆந்த்ரோகுயினோன்கள்,இரெசின்கள், பாலிசக்கரைடு, ஆலோக்டின் பி என்னும் வேதிப் பொருட்கள் உள்ளன. கற்றாழையிலிருந்து வடியும் மஞ்சள்நிற திரவம் மூசாம்பரம் என்று அழைக்கப்படுகிறது.
கற்றாழைச்சாறு சளி,இருமல், குடல்புண் ஆகியவற்றிற்கு மருந்தாக சித்த மருத்துவத் துறையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பல்வேறு மருத்துவ பயன்களை கொண்ட கற்றாழை முடி வளர்ச்சியிலும் Hair growth முக்கிய பங்கு வைக்கிறது.
முக அழகிற்கு மட்டுமல்லாது கூந்தல் வளர்ச்சிக்கும் பெரிதும் உதவும்.முடி உதிர்வு,பொடுகு, இளநரை,வறண்ட கூந்தல்,கூந்தல் வளர்ச்சியின்மை போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வளிக்கும் ஒரு பொருள் கற்றாழை.
கற்றாழை Aloevera ஜெல்லில் ஆன்டி-பாக்டீரியல் தன்மை உள்ளது. இது தலையில் அரிப்பு ஏற்படாமல் தடுக்கும் தன்மை உடையது.
கற்றாழையில் உள்ள ஜெல் கூந்தலுக்கு தேவையான ஈரப்பதத்தை கொடுக்கிறது.கற்றாழை ஜெல்லில் உள்ள புரோட்டியோலைடிக் என்சைம்,புரோட்டீன், விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் கூந்தல் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்.
முடி வழுக்கை பிரச்சினைக்கு கற்றாழை சிறந்த தீர்வளிக்கும். கற்றாழையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் இறந்த செல்களை நீக்கி புதிய முடியின் வளர்ச்சிக்கு உதவும்.
கற்றாழை ஜெல் கூந்தலை பட்டுப்போல் மென்மையாக மாற்றும் தன்மை உடையது.பல்வேறு கூந்தல் தைலங்களின் தயாரிப்பில் கற்றாழை பெரிதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
கற்றாழை Alovera கூந்தல் தைலம்:
கற்றாழை ஜெல்லை நேரடியாக தலையில் தேய்த்தாலும் முடி வளர்ச்சி அதிகரிக்கும்.கற்றாழை கூந்தல் தைலமும் முடி வளர்ச்சிக்கு அதிகப்படியான பலன்களைக் கொடுக்கும்.
கற்றாழை எண்ணெய் தயாரிக்க கற்றாழை மடலில் உள்ள ஜெல்லை தனியாக எடுத்துக் கொள்ளவும். அதன் பிறகு ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் எடுத்து அடுப்பில் வைத்து குறைவான தீயில் வைத்து விடவும்.தேங்காய் எண்ணெய் நன்கு சூடானதும் கற்றாழை ஜெல்லை சேர்க்க வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து வடிகட்டி ஆற வைக்கவும். ஒரு பாட்டிலில் எடுத்து வைத்து உபயோகத்திற்கு பயன்படுத்தவும்.
கற்றாழை கூந்தல் தைலம் முடி கருமையாகவும் அடர்த்தியாகவும் வளர பெரிதும் உதவும்.கற்றாழை அழகு,கூந்தல் பராமரிப்பு மட்டுமல்லாது மாதவிடாய் பிரச்னைக்கும் சிறந்த தீர்வளிக்கும்.
கற்றாழையில் உள்ள மஞ்சள் நிற திரவமான மூசாம்பரம் வீங்கிய மூட்டை வற்ற வைத்து வலி நீக்கும் தன்மை உடையது.
கற்றாழையின் Aloevera நடுவில் கத்தியால் நீளமாக கீறி உள்ளே இருக்கும் வழவழப்பான சோற்று பகுதியில் கையளவு வெந்தயத்தை போட்டு கற்றாழையை பழையபடி நூலால் கட்டி விடுங்கள்.உள்ளே இருக்கும் சோற்றில் ஊறும் வெந்தயம் இரண்டு நாட்களில் முளை கட்டியிருக்கும். அதனுடன் கற்றாழையின் சோற்றையும் எடுத்து நன்றாக அரைத்து வடையாக தட்டி வெயிலில் காயவைத்து தேங்காய் எண்ணெயில் உடைத்து போட்டு ஊற விட்டு நாள்தோறும் தலைக்கு தடவி வர முடி நன்றாக வளரும்.
கற்றாழைச்சாறு நான்கு ஸ்பூன், வெந்தயம்இரண்டு ஸ்பூன், நெல்லிக்காய் இரண்டு ஸ்பூன் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.இதை மென்மையாக மசாஜ் செய்து வேர் கால் வரையிலும் படும்படி தலையில் தடவுங்கள்.அரை மணி நேரம் பொறுத்து சீகக்காய் பயன்படுத்தி தலையை அலசுங்கள்.இதை தொடர்ந்து செய்து வந்தால் கூந்தலில் வெடிப்புகள் நீங்கி பளபளவென்று மின்னும்.
சோற்றுக் கற்றாழையின் சோற்றுப் பகுதியை எடுத்து புழுவெட்டு உள்ள இடத்தில் தினசரி தேய்த்துவர சில நாட்களில் பலன் தெரியும்.