வயது அதிகரிக்கும் போது சரும சுருக்கங்கள் முகத்தில் தோன்ற ஆரம்பிக்கும்.பீட்ரூட்டை(Beetroot) சாப்பிடுவதால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.அது மட்டுமின்றி பீட்ரூட் முகத்தை அழகுபடுத்தவும் உதவும். பீட்ரூட்டை முகத்திற்கு பயன்படுத்துவதால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.பீட்ரூட்டில் இருக்கும் விட்டமின் சி முகத்தில் சரும சுருக்கங்கள் ஏற்படாமல் தடுக்க உதவும்.பீட்ரூட் சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தை கொடுக்க உதவும்.ஆயில் ஸ்கின்(oil skin) இருப்பவர்களுக்கு ஏற்படக்கூடிய பரு மற்றும் கரும்புள்ளிகளை போக்க பீட்ரூட் ஃபேஸ் பேக் பெரிதும் உதவும். பீட்ரூட் சருமத்திலுள்ள இறந்த செல்களை நீக்கும் தன்மை கொண்டது.பீட்ரூட் பேஸ் பேக் முகத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து முகம் பொலிவுடன் இருக்க உதவும்.கண்களை சுற்றி இருக்கும் கருவளையத்தைப் போக்கும் பீட்ரூட் ஃபேஸ் பேக் பெரிதும் பயன்படும்.30 வயது தாண்டிய பிறகு சருமத்தை மிகவும் அக்கறையுடன் பார்த்துக்கொள்ள வேண்டும்.பீட்ரூட் ஃபேஸ் பேக்கை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் சருமம் வயதான தோற்றம் அடையாமல் பாதுகாக்க முடியும்.
பீட்ரூட் ஃபேஸ் பேக் (Beetroot Face Pack) :
தேவையான பொருள்கள்:
கடலை மாவு- இரண்டு ஸ்பூன்
தயிர்- ஒரு ஸ்பூன்
பீட்ரூட் ஜூஸ்- இரண்டு ஸ்பூன்
செய்முறை:
ஒரு கிண்ணத்தில் முதலில் இரண்டு ஸ்பூன் கடலை மாவை எடுத்துக் கொள்ளவும்.பின்னர் தயிர் ஒரு ஸ்பூன் மற்றும் பீட்ரூட் 2 ஸ்பூன் சேர்க்கவும். பின்னர் நன்றாக கலக்கவும்.பின்பு இந்த கலவையை முகத்தில் தேய்த்துக் கொள்ளவும்.15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவுங்கள்.முகம் பளிச்சென்று பொலிவுடன் இருக்கும்.