கோடையில் ஏற்படும் உடல் சூட்டை தணிக்க அருகம்புல் ஜூஸ் (Arugampul Juice) குடிப்பது நல்லது.அருகம்புல் ஜூஸ் எப்படி தயாரிக்கலாம் என்று பார்க்கலாம்.
அருகம்புல் ஜூஸ் Arugampul Juice:
தேவையானவை:
அருகம்புல்- ஒரு கட்டு
எலுமிச்சைச்சாறு- இரண்டு ஸ்பூன்
இஞ்சி- சிறிய துண்டு
தண்ணீர்- இரண்டு கப்
உப்பு- தேவையான அளவு
செய்முறை:
அறுகம் புல்லை கழுவி சிறிய துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.பின்னர் மிக்ஸி ஜாரில் அருகம்புல், இஞ்சி, சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.பின்னர் அரைத்த கலவையுடன் 2 கப் தண்ணீர் சேர்க்கவும்.பின்பு வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.பின்பு உப்பு தேவையான அளவு சேர்க்கவும். எலுமிச்சைச்சாறு(Lemon Juice) இரண்டு ஸ்பூன் சேர்த்துக் கொள்ளவும்.பின்னர் நன்கு கலக்கி பருகவும்.உடல் சூட்டைத் தணிக்கும் அருகம்புல் ஜூஸ் ரெடி.