அமேசான் பிரைம் டே சேல் தேதி அறிவிப்பு:
அமேசான்(Amazon) நிறுவனம் அதிக தள்ளுபடி மற்றும் சலுகையுடன் பொருட்களை விற்பனை செய்யும் பிரைம் டே சேல் தேதியை அறிவித்துள்ளது.
அமேசான் பிரைம் டே சேல்:
அமேசான் பிரைம் டே சேல் ஜூலை 26 ஆம் தேதி தொடங்குகிறது.இந்தபிரைம் டே சேல் ஜூலை 26 நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கி ஜூலை 27 ஆம் தேதி இந்த சிறப்பு விற்பனை முடிவடைகிறது.இந்த சிறப்பு விற்பனையில் பல்வேறு பிரிவில் ஏராளமான பொருள்களுக்கு தள்ளுபடி, சலுகை மற்றும் சேமிப்பு போன்றவை வழங்கப்படுகிறது.
சிறப்பு சலுகைகள் மட்டுமின்றி ஒரே நாளில் முன்னூறுக்கும் அதிகமான பொருள்கள் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.இந்தபிரைம் டே சேல் ஜூன் மாதத்திலேயே நடத்த அமேசான்(Amazon) திட்டமிட்டிருந்தது.ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக தள்ளிவைக்கப்பட்டது.
இந்த விற்பனை பிரைம் சந்தா வைத்திருப்பவர்களுக்கு மட்டும் நடத்தப்பட இருக்கிறது.சிறப்பு சலுகைகள் மட்டுமின்றி வங்கி சலுகைகள்,மாதத் தவணை வசதி ஆகியவையும் இந்த விற்பனையில் வழங்கப்பட உள்ளது.
Get ready to dive into the ocean of great deals, blockbuster entertainment, and new launches this #AmazonPrimeDay on 26th and 27th July. #DiscoverJoy Join Prime Now pic.twitter.com/AKKbgepyB4
— Amazon India (@amazonIN) July 8, 2021