Skip to content

Amazing Health Benefits Of Honey

Amazing Health Benefits Of Honey

என்றும் இளமையுடன் இருக்க தேன்:

தேன்( Honey) ஒரு இனிப்பான உணவுப் பொருளாகும்.தேன் மருத்துவ குணம் கொண்டது.தேன்  மூலம் எல்லா நோய்களையும் சரி செய்ய முடியும்.பூக்களில் காணப்படும் இனிப்பான வழுவழுப்பான திரவத்தில் இருந்து தேனீக்கள் தேனைப் பெறுகின்றன.

Amazing Health Benefits Of Honey

மருத்துவ குணம் கொண்ட தேன்:

உடல் ஆரோக்கியத்துடன் இருக்க தேன் உதவும்.தேனும்  வெந்நீரும் கலந்து  அருந்தினால் உடல்   எடை  குறையும்.

உடல் உறுதி அடைய தேன் உதவும்.

தேனுடன் எலுமிச்சை சாறு கலந்து அருந்தினால் வாந்தி, ஜலதோஷம், தலைவலி குணமாகும்.

தேனுடன்  வெங்காயச்சாறு  கலந்து  சாப்பிட்டால்  கண் பார்வை தெளிவாகும்.

தேனும், முட்டையும்,  பாலும் கலந்து  சாப்பிட்டால் ஆஸ்துமா  சரியாகும்.

பார்லி கஞ்சியுடன் தேன் கலந்து சாப்பிட்டு வர இருமல், சளி தொல்லை, நுரையீரல் தொடர்பான நோய்கள் சரியாகும்.

தேனையும் மாதுளம் பழச் சாற்றையும் சம அளவு கலந்து தினமும் சாப்பிட்டால் இதய நோய் சரியாகும்.

தேனும் பாலும் கலந்து சாப்பிட்டு வந்தால் ரத்தசோகை நீங்கும்.

தேனுடன் சுண்ணாம்பை கலந்து நன்றாக குழைத்து கட்டிகள் மீது தேய்த்துவந்தால் கட்டிகள்  பழுக்கும்.

மீன் எண்ணெயோடு, தேனை சேர்த்து சாப்பிட்டால் ஆறாத புண்கள் ஆறிவிடும்.

கருஞ்சீரகத்தை   நீர் விட்டு காய்ச்சி  தேன் கலந்து சாப்பிட கீல்வாதம் சரியாகும்.

வயிற்று வலி ஏற்பட்டவருக்கு தொப்புளைச் சுற்றி தேன் தடவினால் வயிற்று வலி நீங்கும்.

தேனோடு, பாலோ,  எலுமிச்சை பழச்சாறு கலந்து சாப்பிட பித்தம் சரியாகும். கல்லீரல் வலுவாகும்.

அரை ஸ்பூன் தேனுடன் அரை ஸ்பூன் இஞ்சி சாறு கலந்து காலை நேரத்தில் சாப்பிட்டு வர ரத்தம் சுத்தமடையும்.நரம்புத்தளர்ச்சி  நீங்கும்.

Amazing Health Benefits Of Honey

சாப்பாட்டிற்கு முன் இரண்டு ஸ்பூன் தேன் சாப்பிட்டு வர அல்சர் சரியாகும்.

முருங்கைக்காய் சாற்றுடன்  சம அளவு தேன்( Honey) கலந்து சாப்பிட்டு வர நீர்கோவை சரியாகும்.

அதிகாலையில்  வெறும் வயிற்றில்  தேனை  நாவால் தொட்டு சாப்பிட்டு வந்தால் நோய்கள் எதுவும் வராது.

ஒரு கப்  வெந்நீரில் ஒரு  ஸ்பூன் தேன் சேர்த்து,அதில் எலுமிச்சம் சாற்றையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல்  சுறுசுறுப்பாக இருக்கும். நுரையீரலில் சேர்ந்துள்ள சளி  நீங்கும்.

நெல்லிக்காய்களை  துண்டாக்கி தேன், ரோஜா இதழ்,ஏலக்காய் ஆகியவற்றை 2 நாட்கள் வெயிலில் காய வைக்க வேண்டும். பின்பு  ஒரு ஸ்பூன் காலையும் மாலையும் சாப்பிட்டு வந்தால் வரட்டு இருமல் சரியாகும்.என்றும் இளமையுடன் இருக்கவும் உதவும்.

குடல் மற்றும் வயிற்றுக்  கோளாறுகளை சரி செய்ய தேன் உதவும்.

தேன் குளிர்ச்சியால் ஏற்படும் எல்லா வியாதிகளையும் சரி செய்யும்.

நோய் எதுவும் இல்லாமல் உடலைப் பாதுகாக்க விரும்பினால் தினமும் தேன்( Honey) சாப்பிட வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published.