நாம் மறந்துவிட்ட கலாச்சாரம், பாரம்பரிய உணவுகள், பாரம்பரிய மூலிகைகள் ஆகியவற்றால் இன்று பலவகையான நோய்களுக்கும் நோய்த்தொற்றுகளுக்கும் ஆளாகி சிரமப்பட்டு வருகிறோம். நாம் திரும்பவும் பின்னோக்கி சென்று பாரம்பரிய உணவுகளையும் மூலிகைகளையும் பயன்படுத்தி வந்தால் மட்டுமே அடுத்த தலைமுறையினரை பாதுகாக்க முடியும்.நாம் பார்க்க இருப்பது அரிய வகை மூலிகைச் செடியான நிலவேம்பு Nilavembu .
நிலவேம்பு:Nilavembu
நிலவேம்பு என்பது ஒரு வகை மூலிகைச் செடி.நிலவேம்பு Nilavembu சிறியாநங்கை என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. நிலவேம்பு செடியின் இலையும் தண்டும் கசப்பு சுவை உடையது. நிலவேம்பு செடியின் இலையும் தண்டும் மருத்துவ தன்மை உடையது. நிலவேம்பு செடி 2 முதல் 3 அடி உயரம் வளரும் தன்மை உடையது. இதன் பூக்கள் வெள்ளை நிறத்தில் இருக்கும்.இந்தச் செடி இந்தியாவிலும் இலங்கையிலும் அதிகம் காணப்படுகிறது.இந்த மூலிகைச் செடி நோய் தொற்றுகளையும் பல்வேறு நோய்களையும் குணப்படுத்தும் தன்மை உடையது.
மருத்துவத்தில் நிலவேம்பு:
நிலவேம்பு காய்ச்சல், நீர்கோவை, டெங்கு காய்ச்சல், சிக்கன் குனியா, மூட்டு வலி மற்றும் உடல்வலி, வயிற்றுப் பொருமல், குளிர் காய்ச்சல், மலேரியா, பன்றி காய்ச்சல், தோல் நோய் போன்ற பலவகையான நோய்களை சரி செய்யும் தன்மை கொண்டது.
நிலவேம்பு புற்றுநோயை கட்டுப்படுத்தவும், வராமல் தடுக்கவும் உதவும் என்று ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
நிலவேம்பு சித்த மருத்துவத்திலும் ஆயுர்வேத மருத்துவத்திலும் அதிக அளவில் பயன்படுத்தப்படும் மூலிகையாகும்.
சித்த மருத்துவத்தில் நிலவேம்பு பயன்படுத்த காரணம்:
ஒரு நோயின் நோய்த்தொற்று ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு அல்லது ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு பரவி மக்களை அதிக அளவில் தாக்கும்போது அதனை உலக பரவும் நோய் என்று மருத்துவத்தில் அழைக்கப்படுகிறது.
பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் இதனை கொள்ளைநோய்(பிரளயம்) என்றழைத்தனர். இந்த வகையான கொள்ளை நோய்களை குணப்படுத்த தயாரிக்கப்பட்டது தான் கஷாயம். அந்தக் காலங்களில் தவிர்க்கமுடியாத நோயாக இருந்தது டெங்கு காய்ச்சல், சிக்கன் குனியா. அந்த காய்ச்சலை குணப்படுத்த கொடுக்கப்பட்டது தான் நிலவேம்பு Nilavembu கசாயம்.
நிலவேம்பு கசாயம் அல்லது நிலவேம்பு குடிநீர்:
நிலவேம்பு கஷாயம் என்று அழைக்கப்படுவதால் மக்கள் நிலவேம்பு மூலிகை மட்டுமே பயன்படுத்தி இந்த கசாயம் செய்யப்படுவதாக நினைக்கின்றனர். ஆனால் நிலவேம்பு கஷாயத்தில் நிலவேம்பு ஒரு மூலப்பொருள்.
நிலவேம்பு கஷாயத்தில் உள்ள பொருட்கள்:
நிலவேம்பு, வெட்டிவேர், விலாமிச்சை வேர், சந்தனம், கோரைக்கிழங்கு, பேய்ப்புடல், பற்படாகம், சுக்கு, மிளகு ஆகியவை சேர்ந்த கலவையே நிலவேம்பு கசாயம்.
நிலவேம்பு குடிநீர் தயாரிக்கும் முறை:
சித்த மருத்துவத்தில் கசாயம் தயாரிக்கும்போது மூலப் பொருட்களின் தரம் மற்றும் தன்மைக்கு ஏற்ப அதனுடன் தண்ணீர் சேர்க்க வேண்டும். நிலவேம்பு குடிநீர் தயாரிக்க பயன்படும் மூலப் பொருளுடன் எட்டு மடங்கு தண்ணீர் சேர்த்து அது நாலு மடங்காக மாறும்வரை கொதிக்க வைக்க வேண்டும். பின்பு ஆறவைத்து வடிகட்டினால் நிலவேம்பு கஷாயம் ரெடி.
நிலவேம்பு கஷாயம் எப்படி குடிக்க வேண்டும்?
நிலவேம்பு கசாயத்தை லேசான சூட்டில் குடிப்பது சிறந்தது. நிலவேம்பு கசாயத்தை காய்ச்சிய மூன்று மணி நேரத்துக்குள் குடிக்க வேண்டும். காய்ச்சல் இருப்பவர்கள் ஒரு நாளைக்கு மூன்று முறை குடிக்கலாம். நிலவேம்பு குடிநீரை சாப்பாட்டுக்கு முன்பு தான் குடிக்க வேண்டும்.
அழிந்து வரும் மூலிகை செடிகளை நாம் ஒவ்வொருவரும் வீடுகளில் வளர்த்து வந்தால் நம்முடைய அடுத்த தலைமுறையினர் அந்த மூலிகையை பற்றியும் அதன் பயன்களையும் பெற முடியும்.