அக்ஷய(Akshya) என்றால் குறைவில்லாதது என்று பொருள்.அக்ஷயதிருதி(Akshaya Tritiya) நாளில் நாம் செய்யக்கூடிய எல்லா காரியங்களும் வெற்றி பெறும் என்பது ஐதீகம்.
அக்ஷய திருதியை Akshaya Tritiya:
அக்ஷய திருதியை (Akshaya Tritiya) நாள் மகாலட்சுமி காண நாள்.அக்ஷயதிருதி நாளில் மகாலட்சுமி பூஜை செய்வது சிறந்த பலன்களைத் தரும்.சித்திரை மாதம் வளர்பிறையில் வரும் திருதியை நாளே அட்சய திருதியை என்று சொல்லப்பட்டிருக்கு.
அக்ஷய திருதியை கதைகள் Akshaya Tritiya Story :
அக்ஷய திருதியை பற்றி பல புராணக் கதைகள் உள்ளன.பிரம்மன் தன் படைப்பு தொழிலை தொடங்கியது அக்ஷய திருதியை நாளில் தான் என்று சொல்லப்பட்டிருக்கு.வனவாசம் சென்ற பஞ்சபாண்டவர்கள் தவமிருந்து சூரிய பகவானிடம் அட்சய பாத்திரம் பெற்றதும் அட்சய திரிதியை நாளில் தான் என்று சொல்லப்பட்டுள்ளது. பெருமாளுக்கு கடன் கொடுத்த குபேரர் லட்சுமி தேவியை வணங்கி செல்வத்தைப் பெற்றதும் இந்த அக்ஷய திருதியை நாளில் என்றுசொல்லப்பட்டிருக்கு.பரசுராமர் அவதரித்ததும் அட்சய திருதியை நாளில்தான்.
அக்ஷய திருதி அன்று வாங்க வேண்டிய பொருட்கள்:
அக்ஷய திருதி அன்று லக்ஷ்மி தேவி வாசம் செய்யும் பொருட்களை வாங்குவது சிறப்பு.அக்ஷய திருதி அன்று தங்கம்,வெள்ளி மட்டுமல்லாமல் லட்சுமி தேவி வாசம் செய்யும் பொருட்களான பச்சரிசி, வெல்லம்,உப்பு வாங்குவது நல்லது.
லக்ஷ்மி தேவியின் அருள் கிடைக்க உச்சரிக்கவேண்டிய ஸ்லோகம்: