ஆரோக்கியமான சரும பாதுகாப்பு குறிப்புகள்:ஆரோக்கியமான மற்றும் ஒளிரும் சருமத்திற்கான 7 அன்றாட உணவுகள்
உங்கள் உணவில் சிறிது மாற்றங்களைச் செய்தால், அது ஆரோக்கியமான மற்றும் பொலிவான சருமத்தைப்(Glowing skin) பெற வழிவகுக்கும். பொலிவான சருமத்திற்கு உங்கள் உணவில் ஆரோக்கியமான உணவுகளைச் சேர்க்கவும்.
நாம் அனைவரும் நமது சருமம் பளபளப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம்.உங்கள் உணவில் சிறிது மாற்றம் செய்தால் ஆரோக்கியமான சருமத்தை பெறலாம்.ஆரோக்கியமான சருமத்திற்கு இந்த 7 உணவுகளை உங்கள் உணவில் சேர்க்கவும். அழகு நிலையம் சென்று தோல் சிகிச்சைகள் மற்றும் பல்வேறு கெமிக்கல் கலந்த கிரீம்களை முகத்திற்கு பயன்படுத்துவது பல்வேறு பாதிப்புகளை உண்டாக்கும். நம்மில் பெரும்பாலோர் நமது சருமம் பளபளக்க வேண்டும் என்று விரும்பினால், உங்கள் அன்றாட உணவில் சிறிது மாற்றம் செய்வது உங்களுக்கு ஆரோக்கியமான சருமத்தை கொடுக்கலாம் .எல்லாவற்றிற்கும் மேலாக, நாம் என்ன சாப்பிடுகிறோமோ அது நம் மனதையும் உடலையும் நேரடியாக பாதிக்கும். ஆரோக்கியமான மற்றும் பளபளப்பான சருமத்திற்கான(Glowing skin)அன்றாட உணவுகளைப் பற்றி பார்க்கலாம்.
ஆரோக்கியமான மற்றும் பளபளப்பான சருமத்திற்கான 7 அன்றாட உணவுகள்
1.ஆளி விதைகள்
எங்கள் வாசகர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நாங்கள் நினைக்கும் தயாரிப்புகளை நாங்கள் சேர்க்கிறோம். இந்தப் பக்கத்தில் உள்ள இணைப்புகள் மூலம் நீங்கள் வாங்கினால், நாங்கள் ஒரு சிறிய கமிஷனைப் பெறலாம்.
ஆளி விதை உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல் முக அழகைப் பராமரிக்கவும் பெரிதும் பயன்படும்.ஆளி விதையில் உள்ள ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் சருமத்தை ஈரப்பதத்துடன் வைக்க பெரிதும் உதவும்.ஆளி விதையில் இருக்கும் பைட்டோ கெமிக்கல்ஸ் சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படாமல் தடுக்க உதவும். இதன் காரணமாக சருமம் வயதான தோற்றம் அடையாமல் பாதுகாக்கலாம். முகத்தில் இருக்கும் பருக்களை போக்கும் ஆளி விதை பெரிதும் உதவும். என்றும் இளமையுடன் இருக்க ஆளி விதையை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
-
பீட்ரூட்
பீட்ரூட்டில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன. பீட்ரூட் உடலிலுள்ள இறந்த செல்களை நீக்க உதவுகிறது. பீட்ரூட் உடலிலுள்ள பிரீ ரடிகல்ஸ் ஐ எதிர்த்து போராட உதவுகிறது. பீட்ரூட் ரத்தத்தை சுத்தப்படுத்துவதோடு, ரத்தத்தில் உள்ள நச்சுக்களை நீக்குகிறது. உடலில் இரத்த ஓட்டத்தை தூண்டி சருமத்தை பளபளப்பாக்குகிறது. பீட்ரூட் ஜூஸ் குடிப்பதன் மூலம் இரத்தத்தை உள்ளே இருந்து சுத்தப்படுத்தி, நச்சுகளை நீக்கி, உங்கள் முகத்தில் ஆரோக்கியமான பொலிவை(Glowing skin) ஏற்படுத்தும்.
3.எலுமிச்சை
எலுமிச்சையில் வைட்டமின் சி, பி மற்றும் பாஸ்பரஸ் ஆகியவை அதிக அளவில் உள்ளது. எலுமிச்சை உடலில் இயற்கையான பளபளப்புக்கு சேர்க்க வேண்டிய ஒரு உணவாகும். எலுமிச்சையில் உள்ள அமிலங்கள் இறந்த செல்களை வெளியேற்றும் சருமத்தை வயது ஆகாமல் தடுக்க உதவும்.
- மாதுளை:
மாதுளை உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க பெரிதும் உதவும். மாதுளை உடல் வயதான தோற்றம் அடையாமல் தடுக்க பெரிதும் பயன்படும். சூரிய ஒளியினால் சருமத்தில் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க மாதுளை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மாதுளை பழத்தை அப்படியே சாப்பிடலாம் அல்லது ஜூஸ் போட்டும் குடிக்கலாம்.
-
தயிர்
தயிரில் லாக்டிக் அமிலம், துத்தநாகம், பி வைட்டமின்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் இருப்பதால் சரும பிரச்சனைகளுக்கு ஒரு சிறந்த தீர்வாகும். ஒவ்வொரு நாளும் ஒரு கிண்ணம் தயிர் சாப்பிடலாம். தயிர் சாப்பிடுவதால் சருமம் பொலிவுடன் காணப்படும்.
-
கீரை
தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் அதிகம் உள்ள கீரை, நமது சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க பெரிதும் உதவும்.கீரையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், முதுமையின் ஆரம்ப அறிகுறிகளை எதிர்த்து, சருமம் என்றும் இளமையுடன் இருக்க பெரிதும் பயன்படும்.
-
மஞ்சள் பால்
மஞ்சள் பால் அனைத்து உடல்நலப் பிரச்சினைகளுக்கும் நீண்டகாலமாக அறியப்பட்ட பாரம்பரிய தீர்வாகும். மஞ்சள் பால் குடிப்பதால் சருமத்தை தெளிவுபடுத்தி இயற்கையான பொலிவை அளிக்கிறது.
மேலே குறிப்பிட்ட இந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம் ஆரோக்கியமான சருமம் மற்றும் பொலிவான சருமத்தை பெறலாம்.
Recommended Articles:
Onion hair oil for Hair growth
Benefits of Aloevera For Hair growth
Best food for winter season in India
Amazing Health Benefits Of Honey
Figs: Nutrition and 15 amazing health Benefits
Top 10 Vegetables That Are High in Vitamin C
Amazing Benefits Of Nilavembu Kashayam
Content disclaimer
Content on this website is provided for information purposes only.Tamilneithal.com is not responsible for the accuracy, completeness, suitability, or validity of any information on this article. All information is provided on an as-is basis. The information, facts, or opinions appearing in the article do not reflect the views of Tamilneithal and Tamilneithal does not assume any responsibility or liability for the same