Table of Contents
Homemade effective Hair Care Tips:
குளிர்காலத்தில் தலைமுடியில் ஏற்படும் கடுமையான பாதிப்புகளை எவ்வாறு வீட்டிலேயே சரிசெய்யலாம் Hair care home remedies என்று இந்த பதிவில் நாம் காண இருக்கிறோம். குளிர்காலம் வந்தவுடனே முடி உடைதல்(hair breakage), முடி பிளவு (split ends), முடி வறட்சி(frizziness), முடி கொட்டுதல்( hair fall) போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது. இதுபோன்ற பிரச்சினைகளில் இருந்து விடுபட நாம் பெரும்பாலான நேரங்களில் ரசாயனம் கலந்த முடி பராமரிப்பு சாதனங்களை உபயோகப் படுத்துகிறோம். ஆனால் ரசாயனம் கலந்த முடி பராமரிப்பு சாதனங்களால் நன்மைகளை விட தீமைகளே அதிகம். இந்த தயாரிப்புகளை நீண்டகாலம் உபயோகப்படுத்தும் பொழுது முடி மற்றும் சருமத்திற்கு அதிக பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
இந்த பாதிப்புகளில் இருந்து விடுபடுவதற்கு இயற்கையான பொருட்களை பயன்படுத்தி முடி வளர்ச்சி அதிகப்படுத்துவதற்கு மேலும் வலுவான கூந்தலையும் பெறுவதற்கான வழிமுறைகளை பார்க்கலாம் (hair care tips).
Home Remedies for hair care
1, வாழைப்பழம் & முட்டை ஹேர் மாஸ்க் (Banana & Egg Hair Mask)
சிறிய கிண்ணத்தில் இரண்டு நன்கு பழுத்த வாழைப்பழங்களை பிசைந்து கொள்ளுங்கள் அவற்றுடன் இரண்டு முட்டைகளை சேர்க்கவும்.இந்த கலவையை நன்றாக முடியின் வேர்க்கால்களில் படும்படி பூசிக்கொள்ளவும்.30 நிமிடம் கழித்து உங்கள் தலையை மிதமான தண்ணீரில் கழுவி விடலாம்.இவ்வாறு செய்வதால் உங்கள் தலை முடிக்கு இயற்கையான ஊட்டச்சத்து அதிகமாக கிடைக்கிறது.வாழைப்பழம் மற்றும் முட்டை உள்ளுக்கு மட்டுமல்லாமல் தோல் மற்றும் கூந்தலுக்கு சிறந்த பயன்பாடு அளிக்கிறது.இந்த பேக் உங்கள் தலைமுடிக்கு இயற்கையான பளபளப்பு மற்றும் மென்மையான தன்மையை அளிக்கிறது.
2,சூடான எண்ணெய் சிகிச்சை (Hot oil treatment for routine for hair care)
ஒரு சிறிய கிண்ணத்தில் இரண்டு கரண்டி தேங்காய் எண்ணெய் ஒரு தேக்கரண்டி ஆலிவ் ஆயில்(olive oil) ஒரு தேக்கரண்டி ஆம்லா(Amla) ஆயில், ஒரு தேக்கரண்டி விளக்கெண்ணெய் ஆகியவற்றைக் கலந்து சூடாக்கி மிதமான சூட்டில் தலைமுடியில் வேர்க்கால்கள் வரை வைத்துக் கொள்ளலாம்.சூடான எண்ணெய் சிகிச்சை முடி வறட்சியை சரி செய்வதோடு முடி ஆரோக்கியத்தோடும் தலையில் நல்ல இரத்த ஓட்டத்தையும் அதிகப்படுத்த மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
தலைமுடிக்கு என்னை தேய்ப்பது என்பது அனைவரும் அவசியம் பயன்படுத்தக்கூடிய முதன்மை முடி பராமரிப்பு (hair care) முறையாகும்.தலையில் சூடான எண்ணெய் மசாஜ் கொடுப்பதன் மூலமாக உங்கள் முடிக்கு தேவையான தேவையான அனைத்து அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களையும் பெற முடியும்.
3,முட்டை மற்றும் தயிர் மாஸ்க் (Egg and yogurt mask for hair fall solution)
இரண்டு முட்டை மற்றும் இரண்டு தேக்கரண்டி தயிர் , ஒரு கிண்ணத்தில் நன்றாக கலக்கவும் இந்த கலவையை உங்கள் தலையில் நன்றாக வேர்க்கால்களில் படும்படி தடவவும். 45 நிமிடங்கள் கழித்து லேசான ஷாம்பு உடன் உங்க தலை முடியை கழுவிக் கொள்ளலாம்.
இந்த பேக் உபயோகிப்பதன் மூலம் முடியின் வேர்களுக்கு தேவையான புரதங்கள் (proteins ) மற்றும் புரோபயாடிக் (probiotics) உங்கள் தலை முடியில் இருந்து புதிய முடியை வளர செய்கிறது மற்றும் இது முடியை மென்மையாக்கும் அதோடு இயற்கையான பளபளப்பையும் முடிக்கு கொடுக்கிறது.
4,கற்றாழை ஹேர் பேக் (Aloe vera Hair Mask to prevent hair loss)
ஒரு கிண்ணத்தில் கற்றாழை(Aloevera) ஜெல் ,எலுமிச்சைச்சாறு(lemon juice) மற்றும் ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் (Coconut oil)ஆகியவற்றை நன்றாக கலக்கி முடி வேரில் இருந்து நுனி வரை தேய்த்து 15 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.பின்பு வெதுவெதுப்பான நீரில் உங்கள் தலை முடியை கழுவிக் கொள்ளலாம்.
இந்த ஹேர் பேக்கை பயன்படுத்துவதன் மூலம் வறண்ட முடி பிரச்சினையிலிருந்து விடுபடலாம்.இது அவர்களுக்கு சிறந்த வளர்ச்சி ஊக்கியாக செயல்படுகிறது.
குறிப்பு: கற்றாழை உடலுக்கு மிகவும் குளிர்ச்சி என்பதால் உங்கள் உடல்நிலையை தெரிந்த பின்பு உங்களுக்கு இது ஒத்துக் கொள்கிறதா என்பதை சோதனை செய்த பின்பு இந்த ஹேர் பேக்கை பயன்படுத்தவும்.
5, வெந்தயம் மற்றும் கடுகு எண்ணெய் ஹேர் பேக் (fenugreek and mustard oil hair Mask)
இரண்டு தேக்கரண்டி வெந்தயத்தை(Fenugreek) இரவில் ஊற வைக்கவும். ஊறவைத்த வெந்தயத்தை மறுநாள் காலை நன்றாக பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ளவும்.இரண்டு தேக்கரண்டி கடுகு எண்ணெய் சேர்க்கவும்.இந்தக் கலவையை தலைமுடியில் மசாஜ் செய்து 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் மிதமான ஷாம்புவை பயன்படுத்தி கழுவி விடலாம்.
இக்கலவையை பயன்படுத்துவதால் உங்கள் தலைமுடி பளபளப்பாகவும் மென்மையாகவும் மிகவும் அழகாகவும் காட்சியளிக்கும்.
குறிப்பு: வெந்தயம் உடலுக்கு மிகவும் குளிர்ச்சி என்பதால் உங்கள் உடல்நிலையை தெரிந்த பின்பு உங்களுக்கு இது ஒத்துக் கொள்கிறதா என்பதை சோதனை செய்த பின்பு இந்த ஹேர் பேக்கை பயன்படுத்தவும்.
6, பால் மற்றும் தேன் ஹேர் பேக் (Milk and honey Hair Mask)
ஒரு கிண்ணத்தில் ஒரு கப் பாலை எடுத்து அதனுடன் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து நன்றாகக் கலக்கவும் .இந்த கலவை உங்கள் தலைமுடியில் நன்றாகத் தடவி 10 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் மிதமான ஷாம்புவை பயன்படுத்தி கழுவிக் கொள்ளலாம்.
பால் மற்றும் தேன் இயற்கையாகவே முடியை மென்மையாக்கும் தன்மை கொண்டது. இந்தக் கலவை உங்கள் முடிக்கு இயற்கையான பிரகாசத்தையும் மென்மையும் கொடுக்கும்.
இந்த வழிமுறைகளைப் பயன்படுத்துவதன் மூலம் இயற்கையான பளபளப்பையும் ஆரோக்கியமான கூந்தலையும் பெற முடியும்.
இந்த வழிமுறைகளை பின்பற்றுவதோடு கீழே சொல்லப்பட்டுள்ள வழிமுறைகளை மேற்கொண்ட ஆரோக்கியமான அழகிய கூந்தலைப் பெற முடியும்.
1 முடிந்தவரையில் ஹேர் ட்ரையர்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இது முடி வறண்டு போகும் தன்மையை ஏற்படுத்துகிறது.
2 வீட்டை விட்டு வெளியே செல்லும்போது உங்கள் தலைமுடியை ஸ்கேர்ப் scarf மூடிக் கொள்ளலாம் .குளிர்ந்த வானிலை தலைமுடியை சேதப் படுத்துவதை இது தவிர்க்கும்.
3 ஷாம்பூ உபயோகித்தபின் உங்கள் தலைமுடிக்கு நல்ல தரமான கண்டிஷனரை பயன்படுத்துங்கள். இது உங்கள் தலைமுடி உலர்ந்து போகாமல் நீண்ட நேரம் வரை பாதுகாக்கிறது.
4 வாரத்துக்கு மூன்று முறையாவது தலைக்கு oil தேய்க்க முயற்சி செய்யுங்கள். இது அனைத்து விதமான முடி பிரச்சினைகளும் நீங்குவதற்கு உங்களுக்கு உதவி புரியும்.
முடிவுரை:
மேலே சொன்ன அனைத்து குறிப்புகளையும் பின்பற்றுவதன் மூலம் இயற்கையாகவே மென்மையான மற்றும் ஆரோக்கியமான கூந்தலை முடியும்.
மேலே சொன்னHair care tips குறிப்புகளில் எது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதை கமெண்டில் தெரியப்படுத்துங்கள்?
Recommended Articles:
Onion hair oil for Hair growth
Benefits of Aloevera For Hair growth
Best food for winter season in India
Amazing Health Benefits Of Honey
Figs: Nutrition and 15 amazing health Benefits
Top 10 Vegetables That Are High in Vitamin C
Amazing Benefits Of Nilavembu Kashayam