6 Foods To Cure Acidity in Tamil

0
38
6 Foods To Cure Acidity in Tamil

அமிலத்தன்மை

பொதுவான செரிமான கோளாறுகளில் ஒன்று அமிலத்தன்மை(Acidity). அமில தன்மையின் காரணமாக நெஞ்செரிச்சல்,  வயிறு, மார்பு மற்றும் தொண்டையில் எரிச்சல்  ஆகியவை ஏற்படும்.செரிமான பிரச்சினைகளுக்கு  பெரும்பாலோனோர் உரிய கவனம் செலுத்துவதில்லை.செரிமானக் கோளாறுகள் பிரச்சினையை கவனிக்காமல் விட்டால், நம் ஆரோக்கியத்தையும் பாதிக்கும்.அமிலத்தன்மை என்பது செரிமான நோயாக வரையறுக்கப்படுகிறது. இதில் வயிற்று அமிலம் அல்லது பித்தம் உணவு குழாய்களை எரிச்சலூட்டுகிறது.

6 Foods To Cure Acidity in Tamil

அமிலத்தன்மையுடன் தொடர்புடைய பொதுவான அறிகுறிகள்:

அமிலத் தன்மையின்(Acidity) காரணமாக வயிற்றில்  அசௌகரியம், வெறும் வயிற்றில் குமட்டல் மற்றும் வாந்தி ஏற்படுதல், வயிற்றின் அளவு பெரிதாகுதல், சோர்வடைதல், மலச்சிக்கல்,  பசி இழப்பு ஆகியவையும் ஏற்படும்.அமிலத்தன்மை பிரச்சனையை சமாளிக்க, ஒருவர் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை  பின்பற்ற வேண்டும்.அதாவது சரியான நேரத்தில் சாப்பிடுவது, உட்கார்ந்த நிலையில் சாப்பிடுவது, உங்கள் உணவை நன்றாக மென்று சாப்பிடுவது, உணவுக்கு பிறகு குறைந்தது அரை மணி நேரமாவது நிமிர்ந்து உட்கார்ந்து கொள்வது ஆகியவையாகும்.சில உணவுகள் மற்றும் வீட்டு வைத்தியம் அமிலத்தன்மை அல்லது  அது தொடர்புடைய பிரச்சனைகளைத் தடுக்க உதவும்.அமிலத்தன்மையை சரி செய்ய இந்த ஆறு உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

அமிலத்தன்மையை  சரிசெய்ய உதவும் 6 உணவுகள்

  1.ஓமம்:

ஓமம்   விதைகள் செரிமான மற்றும் இரைப்பை சம்பந்தமான பிரச்சினைகளை  சரி செய்ய பெரிதும் பயன்படும்.  ஓமம் விதையிலுள்ள தைமோல்  என்னும் மூலப்பொருள்  செரிமான பிரச்சனைகளை சரிசெய்ய உதவும். ஓமம் விதைகளை இரவு  தண்ணீரில் ஊறவைத்து ,அதை அடுத்த நாள் வடிகட்டி அந்த தண்ணீரை குடிக்கலாம்.

2.பெருஞ்சீரகம்

சாப்பாட்டுக்கு பிறகு  ஒரு ஸ்பூன் பெருஞ்சீரகம் சாப்பிடுவது இந்திய பாரம்பரியத்தின் ஒரு பொதுவான பகுதியாகும்.  பெருஞ்சீரகம் வாய் துர்நாற்றத்தை போக்க பெரிதும் பயன்படும். பெருஞ்சீரகம் செரிமான பிரச்சனைக்கு சிறந்த தீர்வளிக்கும்.உணவுக்குப் பிறகு தவிர, இரவு தண்ணீரில் ஊறவைத்து,  அடுத்த நாள் அந்த தண்ணீரை குடிக்கலாம்.  பெருஞ்சீரக டீ தயாரித்தும் குடிக்கலாம்.அமிலத்தன்மையை(Acidity) போக்க பெருஞ்சீரகம் பெரிதும் பயன்படும்.

  1. பால் மற்றும் தயிர்

பால் அமிலத்தன்மைக்கு சரியான மருந்தாகும். குளிர்ந்த அல்லது அறை வெப்பநிலையில் உள்ள பால் உடனடியாக அமிலத்தன்மையை நீக்குகிறது. பால் அமிலத்தன்மையை நடுநிலை ஆக்குகிறது.தயிர் அமிலத்தன்மையைக் கட்டுப்படுத்தும் மற்றொரு வழியாகும். தயிரில் உள்ள புரோபயாடிக் குடல் மற்றும் செரிமான பிரச்சனைகளை நீக்குகிறது.தயிர் குடலில் நல்ல பாக்டீரியாவை ஊக்குவிக்கிறது.

6 Foods To Cure Acidity in Tamil

4.தேன்

6 Foods To Cure Acidity in Tamil

ஒரு  ஸ்பூன் தேனை வெதுவெதுப்பான நீரில்  கலந்து குடிப்பது அமிலத்தன்மையை சரி செய்ய உதவுகிறது. இதனுடன் சிறிதளவு எலுமிச்சை சாற்றை கலந்து குடிப்பது  வயிற்றில் அமிலத்தன்மையை  நடுநிலை ஆக்குகிறது.

5.கொத்தமல்லி

கொத்தமல்லி விதைகள் அல்லது கொத்தமல்லி இலைகளை  அமிலத்தன்மையை சரி செய்ய பயன்படுத்தலாம்.  கொத்தமல்லி   இலை  சாற்றை  தண்ணீர் அல்லது மோருடன் கலந்து குடிக்கலாம். கொத்தமல்லி விதை பொடியை சமையலில் பயன்படுத்தலாம். கொத்தமல்லி விதை தேநீர் போட்டு குடிக்கலாம்.கொத்தமல்லி அமிலத்தன்மையின் பொதுவான அறிகுறியான வீக்கத்தைக் குறைக்க உதவுவதோடு, குமட்டல் மற்றும் வாந்தியைக்  கட்டுப்படுத்த உதவும்.

6.பழங்கள்

சிட்ரஸ் பழங்கள் உட்பட அனைத்து பழங்களும்,அமிலங்களை நடுநிலையாக்குகின்றன.செரிமானம் மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்த பழங்கள் பெரிதும் உதவும். தினமும் பழங்களை சாப்பிடுவது அமிலத்தன்மையை கட்டுப்படுத்த உதவும்.

 

6 Foods To Cure Acidity in Tamil

அமிலத்தன்மை மற்றும் அதனுடன் தொடர்புடைய   அறிகுறிகளை சரி செய்ய மேலே  சொன்ன உணவுகளை சாப்பிட வேண்டும். ஆரோக்கியமான வாழ்க்கை முறை ஆரோக்கியமான செரிமான அமைப்புக்கு முக்கியமாகும்.

Content disclaimer

Content on this website is provided for information purposes only.Tamilneithal.com is not responsible for the accuracy, completeness, suitability, or validity of any information on this article. All information is provided on an as-is basis. The information, facts, or opinions appearing in the article do not reflect the views of Tamilneithal and Tamilneithal does not assume any responsibility or liability for the same

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here