தலைமுடி உதிர்வை தடுக்க 5 டிப்ஸ்:
தலைமுடிஉதிர்வு(Hair Fall) இன்று பெரும்பாலோருக்கு இருக்கக்கூடிய முக்கிய பிரச்சினை. தலைமுடி உதிர்வை தடுக்க பல்வேறு முயற்சிகளை அனைவரும் மேற்கொள்கின்றனர். கெமிக்கல் கலந்த ஷாம்பு மற்றும் கெமிக்கல் கலந்த பொருட்களை தலைக்கு பயன்படுத்துவதால் முடி உதிர்வு அதிகமாக ஏற்படுகிறது. முடி உதிர்வை இயற்கை முறையில் சரி செய்ய உதவும் சில டிப்ஸ் பற்றி பார்க்கலாம்.
1. ஆலிவ் ஆயில்(Olive oil) இரண்டு ஸ்பூன், தேன் 2 ஸ்பூன் மற்றும் அதனுடன் லவங்கப்பட்டை பொடி சிறிதளவு சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். பின்பு அந்த கலவையை தலையில் தேய்த்து 15 நிமிடங்கள் வைத்து, பின்னர் தலையை அலச வேண்டும். இந்த கலவையை தொடர்ந்து தலையில் தேய்த்து வந்தால் தலைமுடி மென்மையாவதோடு, முடி உதிர்தல்(Hair Fall) தடுக்கப்படும். மேலும் முடி உதிர்ந்த இடத்தில் புதிய முடி மீண்டும் வளரும்.
2. ஒரு ஸ்பூன் வெந்தயத்தை நன்கு அரைத்து, பின்னர் அதனை ஒரு கப் தண்ணீரில் கலந்து பேஸ்ட் போல் ஆக்க வேண்டும். பின்பு அந்த கலவையை தலையில் தேய்க்க வேண்டும். பின்னர் 15 நிமிடங்கள் கழித்து தலையை அலச வேண்டும். இவ்வாறு செய்து வர தலைமுடி உதிர்வு மற்றும் பொடுகு போன்றவை சரியாகும்.
3. கற்றாழை ஜெல்லை(Aloevera) தலையில் தேய்த்து 15 நிமிடங்கள் கழித்து, தலையை அலச வேண்டும். இவ்வாறு செய்து வர முடி உதிர்வு(Hair Fall) தடுக்கப்படும்.
4. எலுமிச்சையை தயிருடன் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். பின்பு அந்த கலவையை தலையில் தேய்க்க வேண்டும். பின்னர் 15 நிமிடங்கள் கழித்து தலையை அலச வேண்டும். தலையை அலசும்போது சீயக்காய் தேய்த்து தலைக்கு குளித்தால் பொடுகுத் தொல்லை நீங்குவதோடு தலைமுடி உதிர்வு பிரச்சனையும் சரியாகும்.
5. ஒரு கப் கடுகு எண்ணையில்(Mustard oil), சிறிதளவு மருதாணி இலைகளை போட்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் அதனை வடிகட்டி ஒரு பாட்டிலில் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அந்த எண்ணையை தலையில் தேய்த்து வர தலைமுடி உதிர்வு தடுக்கப்படும்.
மேலே சொன்ன இந்த குறிப்புகளை பயன்படுத்தி வந்தால் தலைமுடி உதிர்வு தடுக்கப்பட்டு, முடி நன்கு வளரும்.