How to earn money online from home
ஆன்லைனில் சம்பாதிக்க (Earn money online) பல வழிகள் இருக்கின்றன. அவற்றில் சில வழிகள் சிறந்த பலனைத் தரும். ஆன்லைனில் சிலர் திறமையாக பணம் சம்பாதித்து வருகின்றனர். ஆனால் அவர்கள் எந்த வழிமுறையை பின்பற்றுகிறார்கள் என்று யாருக்கும் அவர்கள் சொல்வதில்லை. நம்பிக்கையோடு தொடர்ந்து ஒரு வேலையை நாம் செய்யும் போது அதில் நிச்சயம் வெற்றி பெறலாம். ஆன்லைனிலும் தொடர்ந்து கடினமாக உழைத்தால் நிச்சயம் ஜெயிக்கலாம். நீங்கள் ஆன்லைனில் நல்ல வருமானத்தை பெற சில வழிகள் பற்றி பார்க்கலாம்.
1.YouTuber:
இன்று ஆன்லைனில் சம்பாதிக்க பிரபலமாக இருக்கக்கூடிய வழிமுறைகளில் ஒன்று யூடியூப்(Youtube). நீங்கள் யூடியூப் ராக விரும்பினால், யூடியூப் சேனல் தொடங்குவது மிகவும் எளிது. யூடியூப் தொடங்க முதலீடு எதுவும் தேவையில்லை. யூடியூப் ஒவ்வொரு நாளும் பலமில்லியன் பார்வையாளர்களை பெறுகிறது. யூடியூபில் ஒரு சேனலை தொடங்கி, வீடியோக்களை பதிவேற்றினால், நல்ல வருமானம் கிடைக்கும். உங்களது சேனல் நிறைய பார்வையாளர்களை பெறும் போது அதிலிருந்து நீங்கள் நிறைய சம்பாதிக்கலாம். உங்களது சேனல் பெரிதாகி விட்டால், நீங்கள் விளம்பர வீடியோக்களை செய்யலாம். அதன் மூலமும் வருமானம் பெறலாம். யூடியூபில் இருந்து வருமானம் பெற சிறந்த content உருவாக்க வேண்டும். தற்சமயம் நிறைய பேர் தங்களுடைய வேலையை விட்டு விட்டு யூடியூப் இல் இறங்கி ஆன்லைனில் நல்ல வருமானம் ஈட்டி வருகின்றனர். ஆன்லைனில் சம்பாதிக்க விரும்புவர்களுக்கு யூடியூப் ஒரு சிறந்த வழியாகும்.
2.Blogging: Earn Money Online
நீங்கள் சகிப்புத்தன்மையுடன் ஆன்லைனில் சம்பாதிக்க விரும்பினால், அவர்களுக்கு பிளாக்கிங் சிறந்த தேர்வாக இருக்கும். பிளாக்கிங் இல் எந்தத் தலைப்பிலும் உங்களது கருத்துக்களை எழுதலாம். அதன் மூலமாக உங்களது பிளாக்(blog) இல் நிறைய Traffic வரும். உங்கள் பிளாக்கை(blog) கூகுள் ஆட்சென்ஸ் (Google Adsense) உடன் இணைப்பதன் மூலம் விளம்பரத்தின் வாயிலாக வருமானத்தைப் பெறலாம்(Earn money online). இந்த பிளாக்கிங் பல பேர் வருமானம் ஈட்டி வருகின்றனர். புதிய பிளாக் தொடங்கி சம்பாதிக்க நான்கு மாதங்கள் வரையாகும். அதுவரைக்கும் நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும். தினமும் பதிவுகளை இட வேண்டும். நீங்கள் எவ்வளவு கடினமாக வேலை செய்கிறீர்களா அதற்கு தகுந்தார் போல் வருமானம் வரும். நல்ல தரவரிசை மற்றும் டிராபிக் பெற தினம் ஒரு பதிவை எழுத வேண்டும். உங்கள் பதிவுக்கு சிறந்த SEO செய்வதன் மூலம், தரவரிசையில் உங்கள் பதிவு முதலிடம் பெறும்.
3. Affiliate Marketing :
சந்தைப்படுத்தல் ( Affiliate Marketing) மூலம் நிறைய சம்பாதிக்கலாம். இன்றைய காலத்தில் சந்தைப்படுத்துதல்லுக்கு நிறைய வாய்ப்புக்கள் உள்ளது. நீங்கள் ஒரு பிளாக்கர் என்றால் உங்கள் தளத்தில் நிறைய டிராபிக் மற்றும் நிறைய பயனர்கள் வருகை இருந்தால் நீங்கள் இன்னும் அதிகமாக சம்பாதிக்கலாம். அதேபோல் யூடியூபில் அதிக சப்ஸ்கிரிபர்ஸ் இருந்தாலும், சந்தைப்படுத்துதல் மூலம் நிறைய சம்பாதிக்கலாம். ஒரு சந்தைப்படுத்தி பவரின் வேலை ஒரு குறிப்பிட்ட தயாரிப்பை விளம்பரப்படுத்துவது ஆகும். சந்தைப் படுத்துபவர் ஒவ்வொரு பொருளின் விற்பனையின் போது கமிஷனைப் பெறுகிறார்.
4.Content Writing : Earn Money Online
ஆன்லைனில் எழுவதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் (make money from home). உங்களுக்கு எழுதுவது பிடிக்கும் என்றால், ஒரு டாபிக் மீது அறிவு மற்றும் ஆர்வமிருந்தால் எழுதுவதன் மூலம் நீங்கள் பணம் சம்பாதிக்கலாம். உள்ளடக்கம் எழுதுதலும் ஃப்ரீலான்சிங்கின் ஒரு பகுதி.உள்ளடக்க எழுதுதலில்(Content Writing) பல வாய்ப்புகள் உள்ளன. இப்போது பல பிளாக்கர்ஸ் மற்றும் சந்தைப் படுத்துபவர்களுக்கு உள்ளடக்க எழுதுதல் மிகவும் அவசியம். அதன் காரணமாக அவர்கள் உள்ளடக்க எழுத்தாளர்களை வேலைக்கு அமர்த்திக் கொள்கின்றனர். உள்ளடக்க எழுத்தாளர்களாக இருக்கும்போது முதலில் குறைந்த வருமானத்தைப் பெறலாம். ஆனால் அனுபவத்தை பெறும்போது ,அதிலிருந்து நிறைய வருமானத்தை பெறலாம். தொடக்கத்தில் Content Writing job பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் குழுக்கள் மூலமாக தேடலாம். பகுதி நேரமாக சம்பாதிக்க விரும்புவர்கள் இந்த வழிமுறையை தேர்வு செய்யலாம்.
5. Freelancing :
குறைந்த நேரத்தில் அதிக வருமானத்தை பெற ஃப்ரீலான்சிங் சிறந்த முறையாகும். நீங்கள் பகுதி நேரத்தில் இதனை வசதியாக செய்யலாம்.ப்ரீலான்சிங் என்பது பல வாடிக்கையாளர்களுக்கான ஒப்பந்த வேலைகளை நீங்கள் செய்கிறீர்கள் என்று அர்த்தமாகும். உங்களுக்காக ஒருவர் உள்ளடக்க(Content) எழுதுபவர் ஆகவும், APP Development ஆகவும் ஒரு பகுதி நேர பணியாளர் இருக்க முடியும். ஒரு கணக்கெடுப்பின்படி ஒரு பகுதிநேர பணியாளர் 80% தங்கள் வழக்கமான வேலைகளை விட அதிகமாக சம்பாதிக்கின்றனர். நீங்கள் ஒரு பகுதி நேர பணியாளராக மாற விரும்பினால் உங்களிடம் 500க்கும் மேற்பட்ட வேலைகள் உள்ளன. அவற்றில் நீங்கள் பிரீலன்ஸிங் தேர்வு செய்யலாம்.Web Development, எழுதுதல், மொழிபெயர்ப்பு, கிராபிக் டிசைனிங் போன்ற துறைகளில் நீங்கள் தேர்வு செய்யலாம்.
ஆன்லைனில் சம்பாதிக்க விரும்புபவர்கள் மேலே கூறிய இந்த ஐந்து முறைகளை பின்பற்றி வருமானம் ஈட்டலாம்.
மேலே சொன்ன குறிப்புகளில் எது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதை கமெண்டில் தெரியப்படுத்துங்கள்?
Recommended Articles:
Onion hair oil for Hair growth
Benefits of Aloevera For Hair growth
Best food for winter season in India
Amazing Health Benefits Of Honey
Figs: Nutrition and 15 amazing health Benefits
Top 10 Vegetables That Are High in Vitamin C
Amazing Benefits Of Nilavembu Kashayam
Spices For Weight Loss in Tamil
How To Use Henna and Indigo as Natural Hair Dye in Tamil
7 Foods For Glowing skin in Tamil