முகத்தை பளபளப்பாக வைத்திருக்க உதவும் 5 ஃபேஸ் பேக்குகள்
இயந்திரமயமான மற்றும் வேகமான வாழ்க்கைக்கு மத்தியில் அழகைப்(Beauty) பராமரிக்க நேரம் செலவிடுவது மிகவும் சிரமமான விஷயமாக உள்ளது. நவீன வாழ்க்கை முறையினால் ஏற்படும் மன அழுத்தம் நமது சருமத்தை பாதிக்கிறது. கருவளையங்கள், கரும்புள்ளிகள், மங்கிய சருமம் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு முக அழகை கெடுக்கின்றன. உங்கள் சருமத்தை நன்றாக பராமரிக்க வீட்டிலேயே ஃபேஸ் பேக்குகள் தயாரித்து பயன்படுத்தலாம். ஹோம் மேட் ஃபேஸ் பேக்குகள் உடனடியாக ஆரோக்கியமான பளபளப்பான சருமத்தை பெற உதவுகின்றன.
-
முல்தானி மெட்டி ஃபேஸ் பேக்(Multani Mitti Face pack)
இந்த ஃபேஸ் பேக் முகத்திற்கு மிகுந்த நன்மை தரக்கூடியது. இந்த ஃபேஸ் பேக் முகப்பருவை குறைக்க உதவுகிறது. மேலும் சருமம் பளபளப்பாக இருக்கவும் இந்த ஃபேஸ் பேக் உதவும். முல்தானி மெட்டி சருமத்திலுள்ள அதிகப்படியான எண்ணெயை நீக்க உதவும். அழுக்கு, வியர்வை, மற்றும் சருமத்திலுள்ள இறந்த செல்களை நீக்க உதவுகிறது. முல்தானி மெட்டி முகத்திற்கு குளிர்ச்சியைத் தரக்கூடியது. முல்தானி மட்டி ஃபேஸ் பேக் முகத்திற்கு தடவி வந்தால் சருமம் பொலிவாக மாறும்.
-
பப்பாளி ஃபேஸ் பேக்(Papaya Face Pack)
பப்பாளி ஃபேஸ் பேக் ஹைப்பர் பிக்மென்டேஷன் பிரச்சினைக்கு சிறந்த தீர்வளிக்கும். சீரற்ற தோல் மற்றும் சன்ஸ்பார்ட்ஸ் போன்ற தோல் பிரச்சினைகளுக்கு பப்பாளி மிகவும் சிறந்தது. அரைத்த பப்பாளி உடன் தேன் கலந்து நன்றாக கலக்கவும். பின்னர் அதனை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வர முகம் பொலிவாக மாறும்.
-
கடலை மாவு ஃபேஸ் பேக்(Besan Face Pack)
சரும பொலிவை மீண்டும் பெற உதவும் அற்புதமான பொருட்களில் ஒன்று கடலை மாவு. கடலை மாவு சிறந்த ஸ்கிரப்பர் ஆக செயல்படுகிறது. சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க கடலைமாவு பெரிதும் உதவும். சருமத்தை மென்மையாக்க கடலைமாவு பெரிதும் உதவும். மேலும் சருமத்தை பளபளப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைக்க உதவுகிறது. கடலை மாவு ஃபேஸ் பேக் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் முகம் பொலிவுடன் மின்னும்.
-
காபி ஃபேஸ் பேக்(Coffee Face Pack)
முகப்பரு மற்றும் கரும்புள்ளிகளை குறைக்கும் எக்ஸ்ஃபோலியேட்டர் காபி ஆகும். கருவளையம் மற்றும் வீங்கிய கண்கள் போன்ற கண்களுக்கு கீழே ஏற்படும் பிரச்சினைகளை சரிசெய்ய காபி உதவும். காபியில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட்கள் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க உதவும். காபி பவுடரையும் தேனும் கலந்து முகத்தில் தடவி வந்தால் முகம் பொலிவாக மாறும்.
-
வாழைப்பழ ஃபேஸ் பேக்(Banana Face Pack)
நம் சருமத்திற்கு வாழைப்பழம் மிகுந்த நன்மை தரக்கூடியது. சருமத்தை பிரகாசமாக மாற்ற வாழைப்பழம் பெரிதும் உதவும். சரும சுருக்கங்களைப் போக்க வாழைப்பழம் பெரிதும் உதவும். முகப்பரு தழும்புகளை நீக்க வாழைப்பழம் பெரிதும் உதவும். வாழைப்பழம், தேன், பால் ஆகியவற்றை கலந்து ஃபேஸ் பேக் போட்டால் முகம் பொலிவாக மாறும்.