Site icon Tamil Neithal

20 Tips For Stomach Problem In Tamil

20 Tips For Stomach Problem In Tamil

வயிற்றுக் கோளாறுகளை(Stomach Problem) சரி செய்ய உதவும் குறிப்புகள்:

1.ஒரு துண்டு இஞ்சியை(Ginger) நசுக்கி ஒரு கப் நீரில் போட்டு, பாதியாகும் கொதிக்கவைத்து நீரை மட்டும் வடிகட்டி குடித்து வந்தால் வயிறு உப்புசம், புளித்த ஏப்பம் குணமாகும்.

2. ஒரு ஸ்பூன் சீரகத்தை(Cumin seed) எடுத்து சிறிதளவு நீர்விட்டு அரைத்து நீரில் கலந்து சாப்பிட்டால் வயிறு உப்புசம் அடங்கும்.

3. வெந்தயக் கீரையுடன் துவரம் பருப்பு சேர்த்து கூட்டு வைத்த சாப்பிட்டால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.

4. ஒரு கரண்டி இஞ்சிச் சாறுடன்,ஒரு கரண்டி கரிசலாங்கண்ணி இலைச்சாறை கலந்து மூன்று வேளை சாப்பிட்டால் வயிறு வலி குணமாகும்.

5. சிறிதளவு பேய்மிரட்டி இலையைப் பிழிந்து சாறெடுத்து, ஒரு கரண்டி சாற்றை ஒரு கப் தண்ணீரில் கலந்து சாப்பிட வயிற்று வலி நீங்கும்.

6. ஒரு வெற்றிலையோடு(Betel leaf) சிறிதளவு சீரகம் ,உப்பு இரண்டையும் சேர்த்து சாப்பிட்டால் வயிற்று அஜீரணம் நீங்கும்.

7. எலுமிச்சைச் சாற்றில், சிறிதளவு ஆப்பசோடா மாவைப் போட்டு கலக்கி குடித்தால் வயிற்று வலி(Stomach Problem) குணமாகும்.

8. வெற்றிலைச் சாறு ஒரு கரண்டி அளவு குடித்தால் வயிற்று உப்புசம் நீங்கும்.

9. சிறிதளவு சீரகம், உப்பு இரண்டையும் சேர்த்து தின்று சிறிதளவு வெந்நீர் குடிக்க வயிற்று வலி குணமாகும்.

10. சுக்கை இடித்து தூளாக்கி, அரைக்கரண்டி சுக்குத் தூளை எடுத்து அதனுடன் அரை கரண்டி அளவு சர்க்கரையும் சேர்த்து வாயில் போட்டு கொஞ்சம் தண்ணீர் சேர்த்து விழுங்கினால் வயிற்று வலி சரியாகும்.

11. சிறிதளவு மிளகு ,சீரகம், உப்பு இம்மூன்றையும் எடுத்து நன்றாக அரைத்து வாயில் போட்டு விழுங்கி, சிறிதளவு தண்ணீர் குடித்துவிட்டால் எந்த விதமான வயிற்று வலி ஆனாலும் உடனே குணமாகும்.

12. 50 கிராம் ஓமத்தை எடுத்து ,ஒரு சட்டியில் போட்டு வறுக்க வேண்டும். சிவக்க வறுத்த பின், ஆறவைத்து நன்றாக உமி போகும்வரை பிசைந்து, இதனுடன் 10 கிராம் பனை வெல்லத்தை சேர்த்து அரைத்து காலை மாலை சாப்பிட்டு வந்தால் வயிற்று உப்புசம் நீங்கும்.

13. சுக்கு, மிளகு ,திப்பிலி இவைகளை சம எடை வீதம் எடுத்து, வறுத்து பொடியாக்கி பசு நெய்யில் கலந்து சாப்பிட்டால் வயிற்றுக் கோளாறுகள் நீங்கும்.

14. சிறிதளவு பாகல் இலைகளை எடுத்து பிழிந்து சாறு எடுத்து, இத்துடன் சிறிதளவு மிளகு பொடி மற்றும் நெய் சேர்த்து குழைத்துச் சாப்பிட்டால் வயிற்று வலி,அஜீரணம் ,பொருமல் போன்ற பிரச்சனைகள் சரியாகும்.

15. சுடுநீரில் மிளகுப் பொடியையும், பெருங்காயப் பொடியையும் கலந்து குடித்தால் வாயுக் கோளாறுகள் நீங்கும்.

16. ஒரு கரண்டி இஞ்சி சாறுடன் ,ஒரு கரண்டி துளசி இலைச்சாறு கலந்து காலை ஒரு கரண்டி வீதம் 7 நாட்கள் சாப்பிட்டு வந்தால் வாயுத்தொல்லை நீங்கும்.

17. 10 கிராம் பிரண்டை, 10 கிராம் ஓமம் இரண்டையும் தட்டி ஒரு சட்டியில் போட்டு இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு , ஒரு டம்ளராக சுண்டும் அளவிற்கு காய்ச்சி, ஒரு நாள் மூன்று வேளை மூன்று கரண்டி வீதம் குடித்து வந்தால் அஜீரணம் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகள் சரியாகும்.

18. இளம் முருங்கை மரத்தின் பட்டையை, 200 கிராம் அளவுக்கு எடுத்து, ஒரு லிட்டர் நீர்விட்டு கால் பாகமாக சுண்டக்காய்ச்சி, அதில் கால் லிட்டர் விளக்கெண்ணெய் சேர்த்து, நீர் சுண்டும் வரை காய்ச்சி வடிகட்டி ,காலையில் அரைக் கரண்டி அளவு சாப்பிட்டால் வாயுக் கோளாறு நீங்கும்.

19. குழந்தைகள் வயிற்று வலியால் அழும் சமயங்களில் கடுக்காயை இழைத்து வயிற்றில் பற்று போல போட்டால் வயிற்று வலி(Stomach Problem) சரியாகும்.

20. சீந்தில் தண்டுகளை காயவைத்து, ஒரு கரண்டி பொடியாக எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த பொடியை 4 டம்ளர் தண்ணீர் விட்டுக் காய்ச்ச வேண்டும். ஒரு டம்ளர் அளவாக சுண்டிய பிறகு, காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் பசியின்மை ,வயிற்று வலி, செரிமானமின்மை ஆகிய பிரச்சினைகள் சரியாகும்.

Exit mobile version