விநாயகர்:
எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் முழு முதற் கடவுள் விநாயகர் பெருமான் தான். கடவுள்களிலே மிகவும் எளிமையான கடவுளாகவும் எளிமையான வழிபாட்டு முறையிலும் நம்முடைய குறைகளை தீர்த்துக் கொள்ள முடியும் எனில் இந்த விநாயகர் தான்.
தினமும் காலையில் எழுந்து குளித்த பிறகு விநாயகர் படத்திற்கு முன்பாக ஒரு தீபத்தை ஏற்றி வைத்து விடுங்கள். அதன் பிறகு தீபத்திற்கு முன்பாக ஒரு தட்டை வைத்து அதில் 2 ஏலக்காய் மட்டும் வைத்து உங்களுடைய பிரச்சனைகள் எதுவோ அது தீர வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ளுங்கள். இவ்வளவு தான் வழிபாடு. இதை தொடர்ந்து செய்து வருவதன் மூலம் உங்கள் வாழ்க்கையில் இருக்கும் பிரச்சனைகள் ஒவ்வொன்றாக விலகி செல்வதை நீங்களே காண்பீர்கள்.அதன் பிறகு இவருக்கு படைத்த இந்த ஏலக்காவை நீங்கள் அப்படியே சாப்பிடலாம் அல்லது சமையலிலும் சேர்த்துக் கொள்ளலாம்.
நம்முடைய பிரச்சனைகள் துன்பங்கள் அனைத்தும் நீங்கி இன்பமாய் வாழ விநாயகரை எளிமையான முறையில் இப்படி பூஜித்து வந்தாலே போதும்.