Skip to content

15 Tips For Breastfeeding In Tamil

15 Tips For Breastfeeding In Tamil

தாய்ப்பால் இயற்கையாக  சுரக்க  சில டிப்ஸ்:

தாய்ப்பால்(breastfeeding) தான் ஒரு குழந்தையின் சக்திவாய்ந்த நோய் எதிர்ப்பு மருந்தாகும். ஆனால் சில தாய்மார்களுக்கு சரியாக பால் சுரப்பதில்லை. இயற்கையாக பால் சுரப்பதற்கு நம் முன்னோர்கள் சில இயற்கை மருத்துவத்தை நமக்கு வழங்கி உள்ளனர். தாய்ப்பால் இயற்கையாக சுரக்க என்ன செய்யலாம்  என்பது பற்றி பார்க்கலாம்.

  • கல்யாண முருங்கை இலையை எடுத்து, சிறுசிறு துண்டுகளாக நறுக்கி பாசிப் பருப்புடன் கலந்து நன்றாக சமைத்து சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.
  • பூண்டுடன்(Garlic),முருங்கைப் பூவை சேர்த்து சமைத்து உண்டு வந்தால் பால் பெருகும்.
  • முருங்கைக் கீரையை உணவில் அதிகம் சேர்த்து வந்தால் தாய்ப்பால் பெருகும்.
  • ஆலமர தளிரை எடுத்து அரைத்து பாலில் கலந்து சாப்பிட்டு வர பால் நன்றாக சுரக்கும்.
  • சீரகத்தை(Cumin seeds) பொடியாக்கி கலந்து வெல்லத்தில் சாப்பிட்டு வர பால் சுரப்பு அதிகரிக்கும்.
  • புழுங்கல் அரிசி, கோதுமை, வெந்தயம் இந்த மூன்றையும் எடுத்து பொடியாக்கி கஞ்சியாக வைத்து சாப்பிட்டால் பால் அதிகமாக சுரக்கும்.
  • இலுப்பை இலைகளை மார்பில் வைத்துக் கட்டி வந்தாலும் பால் சுரப்பை அதிகரிக்கும்.
  • ஒரு கைப்பிடி அளவு ஆமணக்கு இலைகளை எடுத்து நீரில் போட்டு வேகவைத்து இறக்கி மிதமான சூட்டில் மார்பில் வைத்து ஒத்தடம் கொடுத்து வந்தால் பால் சுரப்பை அதிகரிக்கும். மேலும் ஆமணக்கு இலைகளை மார்பில் வைத்துக் கட்டிவர பால் சுரப்பு அதிகரிக்கும்.
  • அம்மான் பச்சரிசி செடியை பூ ,இலையோடு எடுத்துவந்து அரைத்து ஒரு டம்ளர் பாலில் கொட்டைப்பாக்களவு போட்டு கலக்கி குடிக்க பால் அதிகளவில் சுரக்கும்.
  • தாளிக் கீரையை  கொதிக்கும் நீரில் போட்டு வெந்ததும் பிசைந்து காலை, மாலை சாப்பிட்டு வர பால் சுரப்பு அதிகரிக்கும்.
  • வெந்தயத்தை(Fenugreek) வேக வைத்து கடைந்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் பால் சுரப்பு அதிகரிக்கும்.
  • பப்பாளிக்காயை சமைத்து உண்டு வந்தால் பால் சுரப்பு அதிகரிக்கும்.
  • அதிமதுரத்தை இடித்து தூளாக்கி,தூளை தேனில் கலந்து சாப்பிட்டு வர தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.
  • பெருஞ்சீரகத்தை நீரில் கொதிக்கவைத்து வடிகட்டி அந்த தண்ணீரை குடிக்கலாம். பெருஞ்சீரகம் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும்.
  • துளசியில்(Basil) விட்டமின் கே அதிக அளவில் உள்ளது. துளசியை சாப்பிட்டால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.

மேலே சொன்ன இந்த குறிப்புகளை பின்பற்றி வந்தால் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published.