கூந்தல் அடர்த்தியாகவும் கருகருவென இளநரை எதுவுமில்லாமல் இருந்தால் தான் அழகு.முடி(Hair) ஒருவரின் அழகை தீர்மானிப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது.மெலனின் என்ற பிக்மெண்ட்(Pigment) இழப்பால் வயது கூடக்கூட முடி நரைத்தல் இயற்கையானதாகும்.பெரும்பாலோருக்கு இருக்கக்கூடிய பிரச்சினை இளநரை தான்.நீண்ட நாட்களாக உள்ள நோய், பித்தம், பரம்பரை, சத்துக்குறைவு போன்றவை இளநரை(Grey Hair )ஏற்பட சில காரணங்களாகும்.
இளநரையை போக்க Tips to Remove Grey Hair:
1. கறிவேப்பிலையைத் தின்றால் நரைமுடியை தவிர்க்க முடியும்.
2. வைட்டமின் ஏ, விட்டமின் பி, வைட்டமின் இ, வைட்டமின் கே, இரும்புச்சத்து, தாமிரச்சத்து போன்றவை அதிகமுள்ள உணவு உட்கொண்டால் இளநரை ஏற்படாமல் தடுக்கலாம்.
3.நல்லெண்ணெயுடன் நெல்லிக்காய் சாற்றைக் கலந்து சூடாக்கி தலையில் தேய்த்து குளித்துவந்தால் இளநரையை தடுக்கலாம்.
4.ஒரு கப் மருதாணி, சிறிதளவு தேங்காய் எண்ணெய், சிறிதளவு இஞ்சிச் சாறு, சிறிதளவு தேயிலை நீர் ஆகியவற்றை கலந்து முதல் நாள் இரவே ஊறவைத்து அடுத்த நாள் இந்த பேஸ்ட்டை தலையில் தேய்த்து 15 நிமிடங்கள் கழித்து குளித்துவந்தால் இளநரை மறையும்.
5.கரிசலாங்கண்ணிச் சாற்றை தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி வடிகட்டி தலைக்கு தேய்த்து குளித்துவந்தால் இளநரை மறையும்.இந்த கரிசலாங்கண்ணி தைலம் வயதானாலும் நரைமுடி வராமல் தடுக்க உதவும்.
6.தேங்காய் எண்ணெயில் மூங்கில் இலைகளை போட்டு 14 நாட்கள் ஊறவைத்து பின்பு அந்த எண்ணெய்யை தினமும் பயன்படுத்தி வந்தால் இளநரை மறையும்.
7.பொன்னாங்கண்ணிக் கீரையை நல்லெண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் இளநரை மறையும் .
8. வெற்றிலை, கறிவேப்பிலை, மிளகு, சீரகம், கசகசா, கற்பூரம் ஆகியவற்றை தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி வடிகட்டி அந்த எண்ணெய்யை தலைக்கு தேய்த்துக் குளித்து வந்தால் இளநரையை தடுக்கலாம்.
9.நெல்லிமுள்ளி எனப்படும் நெல்லிக்காய் வற்றலை கருக்கி இளநரைக்கு தடவிவர இளநரை மறையும்.
10.வெந்தயம்,மிளகு, சீரகம் ஆகியவை சம அளவு எடுத்து பொடிசெய்து தேங்காய் எண்ணெயில் சேர்த்து காய்ச்சி தலைக்குத் தேய்த்துக் குளித்தால் இளநரை நீங்கும்.
11.வெள்ளைப் பூண்டு சாற்றை தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் இளநரை நீங்கும்.
12.அதிமதுரம், நெல்லிக்காய், பால் ஆகியவற்றை நல்லெண்ணெயில் சேர்த்து காய்ச்சி தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் இளநரை நீங்கும்.
13. முசுமுசுக்கை சாற்றை நல்லெண்ணெயில் கலந்து காய்ச்சி வடிகட்டி தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் இளநரை மறையும்.
14.மருதாணி இலை, நெல்லிக்காய்ச் சாறு, தேயிலை நீர், முட்டையின் வெள்ளைக்கரு ஆகியவற்றை கலந்து அந்தப் பேஸ்ட்டை தலையில் தேய்த்து குளித்துவர இளநரை சரியாகும்.
15. மருதாணி, கறிவேப்பிலை, வேப்பிலை ஆகியவற்றை வெயிலில் காயவைத்து பொடியாக்கி அந்தப் பொடியை துணியில் கட்டி அதை எண்ணெய்யில் போட்டு அந்த எண்ணெய்யை தினமும் பயன்படுத்தி வந்தால் முடி நரைப்பது தடுக்கப்பட்டு முடி கருகருவென வளரும்.