Skip to content

10 Home Remedies for Hair Growth in Tamil

Ghee For Hair Growth in Tami

முடி வளர்ச்சிக்கு எளிய வீட்டு வைத்தியம்

பழைய காலங்களில் பெண்கள் மூலிகைகளைக் கொண்டு எண்ணெய் காய்ச்சி முடிக்கு(Hair Growth) பயன்படுத்தி வந்தனர். பின்பு சிகைக்காய் பயன்படுத்தி தலையை அலசுவார்கள். இதன் காரணமாக முடியானது அடர்த்தியாக, பளபளப்பாக, ஆரோக்கியமாக வளர்ந்தது.

முடியின் வகை

முடியில் நீளமான முடி, சுருட்டை முடி என்ற வகைகள் காணப்படுகின்றன. முடியின் வகைக்கு ஏற்றாற்போல் முடியை பாதுகாக்க வேண்டும்.

10 Home Remedies for Hair Growth in Tamil

எங்கள் வாசகர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நாங்கள் நினைக்கும் தயாரிப்புகளை நாங்கள் சேர்க்கிறோம். இந்தப் பக்கத்தில் உள்ள இணைப்புகள் மூலம் நீங்கள் வாங்கினால், நாங்கள் ஒரு சிறிய கமிஷனைப் பெறலாம்.

ஆயுர்வேத முடி பராமரிப்பு

ஒருவருக்கு வேலை செய்யும் முடி வளர்ச்சி விதிமுறை மற்றவருக்கு வேலை செய்யாமல் போகலாம். பின்வரும் காரணங்கள் அனைத்தும் விரிவான ஆயுர்வேத முடி பராமரிப்பை உருவாக்குகின்றன.

ஆரோக்கியமான மனம்

உகந்த ஊட்டச்சத்து

எண்ணெய்

உச்சந்தலையில் மசாஜ்

மூலிகைகள்

ஒவ்வொருவரும் முடி வகைக்கு ஏற்ற முறைகளை பயன்படுத்துவது முடி வளர்ச்சியை அதிகரிக்கும்.

ஆரோக்கியமான மனம்

ஆயுர்வேதத்தின் ஒரு முக்கிய கோட்பாடு என்னவென்றால், எல்லா நோய்களும் மனதில் தோன்றுகின்றன.மன நிலையில் ஏற்றத்தாழ்வு இருப்பது முடி வளர்ச்சியுடன் தொடர்புடையது. அதிகப்படியான மன அழுத்தம் முடி வளர்ச்சியை(Hair Growth) பாதிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. 2020 ஆய்வில், ஹார்மோன் மாற்றங்கள் முடியின் வளர்ச்சியை பாதிப்பதாக தெரிவிக்கின்றன. ஆரோக்கியமான மனநிலை முடி வளர்ச்சியை அதிகரிக்கும்.

ஊட்டச்சத்து

ஆயுர்வேதத்தில் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது முடி வளர்ச்சி பாதுகாக்கும் என்று சொல்லப்படுகிறது. ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம் முடி உதிர்வை தடுத்து முடி வளர்ச்சியை அதிகரிக்கலாம்.

முடி வளர்ச்சிக்காக சாப்பிட வேண்டிய உணவுகள்

பழங்கள் மற்றும் காய்கறிகள் சாப்பிட வேண்டும்.

கொழுப்பு குறைவாக உள்ள நெய் மற்றும் நட்ஸ் வகைகளை சாப்பிடலாம்.

செரிமானத்துக்கு உதவும் இஞ்சி,மஞ்சள், சீரகம் ஆகியவற்றை சாப்பிடலாம்.

திரிபலா சூரணத்தை சாப்பிடலாம்.

புரதச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடலாம்.

எண்ணெய்

முடிக்கு எண்ணெய் தேய்ப்பது மயிர் கால்கள் மற்றும் உச்சந்தலையை பாதுகாக்க உதவும். முடிக்கு எண்ணெய் தேய்ப்பதால் முடி வளர்ச்சி(Hair Growth) அதிகரிக்கும். முடிக்கு எண்ணெய் தேய்ப்பது முடிக்கு தேவையான ஈரப்பதத்தை கொடுக்கும். ஆயுர்வேத முறைப்படி, வாடா,பிட்டா,கபா என்ற வகைகளில் உடலைப் பிரிக்கின்றனர். ஒவ்வொரு வகைக்கும் முடி வளர்ச்சியானது வேறுபடும்.

வாடா களுக்கு பாதாம் அல்லது எள் எண்ணெய்

பிட்டாக்களுக்கு தேங்காய் அல்லது பாதாம் எண்ணெய்

கபாக்களுக்கு ஆலிவ் எண்ணெய்

சாதாரணமாக தேங்காய் எண்ணை அல்லது எள் எண்ணெய் பயன்படுத்தலாம்.

நெல்லிக்காய், செம்பருத்தி, ஆலிவேரா ஆகியவற்றை கொண்டு மூலிகை

எண்ணெய்  தயாரித்தும் பயன்படுத்தலாம். வாரத்திற்கு 2 முறை தலைக்கு எண்ணெய் தேய்ப்பது நல்லது.

உச்சந்தலையில் மசாஜ்

தலைக்கு எண்ணெய் தேய்க்கும்போது எண்ணெய்யை லேசாக சூடாக்கி

உச்சந்தலையில் நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு செய்து வர முடி வளர்ச்சியானது அதிகரிக்கும்.

மூலிகைகள்

ஆம்லா, சிகைக்காய், வேம்பு மற்றும் செம்பருத்தி ஆகியவற்றைக்  கொண்டு எண்ணெய் காய்ச்சி தலைக்குப் பயன்படுத்தலாம். மூலிகைகளைக் கொண்டு எண்ணெய் காய்ச்சி தலைக்கு தேய்க்கும் போது முடி வளர்ச்சியானது(Hair Growth) அதிகரிக்கும். மூலிகை ஹேர் பேக் பயன்படுத்துவதன் மூலமாகவும் முடி வளர்ச்சி அதிகரிக்கலாம். மூலிகை ஹேர் பேக் ஆக சில மூலிகைகள் பயன்படுத்தப்படுகின்றன.

ரோஜா இதழ்கள்

பச்சை தேயிலை இலைகள்

துளசி

ஆம்லா

மருதாணி

செம்பருத்தி

ரோஜா இதழ்கள்

ரோஸ் ஆயில் மென்மையான நறுமண எண்ணெயாக செயல்படும். இதன் காரணமாக முடிக்கு மென்மையான தன்மை ஏற்படும்.

பச்சை தேயிலை தேநீர்

சூடான பச்சை தேயிலை தேநீர் முடிக்கு நல்ல பளபளப்பை தரும் தன்மை கொண்டது. முடி வளர்ச்சியை அதிகரிக்கவும் பெரிதும் உதவும்.ரோஸ் வாட்டருடன் கிரீன் டீ பவுடரை கலந்து  தலைக்கு பயன்படுத்தலாம். கிரீன் டீ முடி வளர்ச்சியை தூண்டும் தன்மை கொண்டது.

துளசி

துளசி முடி வளர்ச்சியை ஊக்குவிக்க பயன்படுகிறது. துளசி தலையில் ஏற்படும் எரிச்சலை போக்க பெரிதும் உதவும்.

ஆம்லா

நெல்லிக்காய் என்று அழைக்கப்படும் ஆம்லாவில் விட்டமின் சி அதிக அளவில் உள்ளது. தலையிலுள்ள பொடுகை நீக்க நெல்லிக்காய் பெரிதும் உதவும்.

மருதாணி இலைகள்

தலையில் ஏற்படும் எரிச்சலை சரிசெய்ய மருதாணி இலை பெரிதும் உதவும். முடி வளர்ச்சியை அதிகரிக்கும் மருதாணி பெரிதும் பயன்படும்.

செம்பருத்தி

10 Home Remedies for Hair Growth in Tamil

செம்பருத்தி முடி வளர்ச்சியை தூண்ட பெரிதும் பயன்படுகிறது. முடி உதிர்வை தடுத்து முடி வளர்ச்சியை அதிகரிக்க செம்பருத்தி பெரிதும் உதவும்.

மூலிகைகளை பயன்படுத்துவதற்கு முன்பு தோலின் மீது சிறிது தேய்த்துப் பார்த்து அலர்ஜி ஏற்படுகிறது என்பதை தெரிந்த பின்பு பயன்படுத்தவும்.

அரோமாதெரபி

உங்கள் கூந்தல் பராமரிப்பில் நறுமண சிகிச்சையை  பயன்படுத்துவதே அரோமாதெரபி ஆகும்.வாசனைகள் “உணர்ச்சி, உடல் மற்றும் ஆன்மீக மட்டத்தில் ஆழ்ந்த நன்மைகளையும் மாற்றங்களையும் கொண்டுவரும். நறுமண எண்ணெய்கள் மயிர்கால்களை தூண்டி முடி வளர்ச்சியை அதிகரிக்கும். சில நறுமண எண்ணெய்கள் பற்றிப் பார்க்கலாம்.

ரோஸ்மேரி

லாவெண்டர்

கெமோமில்

ஹேர் பேக்ஸ்

ஹேர் பேக்ஸ் முடிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை , பெரும்பாலும் ஊட்டச்சத்து இல்லாத பகுதிகளுக்கு வழங்கி முடி வளர்ச்சி அதிகரிக்க பெரிதும் உதவும். உச்சந்தலையில் ஏற்படும் பொடுகு மற்றும் வறட்சி  போன்றவற்றை சரி செய்ய ஹேர் பேக்ஸ் உதவும்.

கற்றாழை ஹேர் பேக்:

வறண்ட மற்றும் அரிக்கும் தலையை சரி செய்ய கற்றாழை ஹேர் பேக் பெரிதும் உதவும்.

எலுமிச்சை மற்றும் வேம்பு ஹேர் பேக்

எண்ணெய் சருமத்திற்கு எலுமிச்சை மற்றும் வேம்பு ஹேர் பேக் பெரிதும் உதவும்.

மருதாணி ஹேர் பேக்ஸ்

உச்சந்தலையை குளிர்விக்க மருதாணி ஹேர் பேக் பெரிதும் பயன்படும்.

நினைவில் கொள்ள வேண்டியவை

மேலே குறிப்பிட்டபடி உணவு முறை மற்றும் எண்ணெய் குளியல், ஹேர் பேக்ஸ் போன்றவற்றை பயன்படுத்துவதன் மூலம் முடி வளர்ச்சியை அதிகரிக்கலாம்.நமது தலைமுடி பெரும்பாலும் நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தின் வெளிப்பாடாகும்.முறையான கூந்தல் பராமரிப்பு என்பது முடியையும், உடலின் மற்ற பகுதிகளையும் கவனித்துக்கொள்வதாகும்.

ஆயுர்வேத முடி பராமரிப்பு என்பது முடி வளர்ச்சி மற்றும் பளபளப்பான, ஆரோக்கியமான கூந்தலுக்கு வழிவகுக்கும்.

மேலே சொன்னHair care tips குறிப்புகளில் எது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதை கமெண்டில் தெரியப்படுத்துங்கள்.

Recommended Articles:

Onion hair oil for Hair growth

Benefits of Aloevera For Hair growth

15 Amazing Tips For Grey Hair

Top 5 Hair Growth Herbs

Best food for winter season in India

Amazing Health Benefits Of Honey

Figs: Nutrition and 15 amazing health Benefits

Health Benefits Of Spinach

Health Benefits of Aavarampoo

Top 10 Vegetables That Are High in Vitamin C

Amazing Benefits Of Nilavembu Kashayam

Potato For Skin Whitening

Top10 VitaminC Rich Fruits

 

Content disclaimer

Content on this website is provided for information purposes only.Tamilneithal.com is not responsible for the accuracy, completeness, suitability, or validity of any information on this article. All information is provided on an as-is basis. The information, facts, or opinions appearing in the article do not reflect the views of Tamilneithal and Tamilneithal does not assume any responsibility or liability for the same

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *