முகத்தில் தக்காளியை பயன்படுத்துவதால் கிடைக்கும் 10 நன்மைகள்
எல்லாருடைய வீட்டு கிச்சனில் இருக்கக்கூடிய ஒரு பொருள் தான் தக்காளி(Tomato). உடல்நலத்துக்கு மட்டுமல்லாது முக அழகை(Beauty tips) பராமரிப்பதிலும் தக்காளி முக்கிய பங்கு வகிக்கிறது. தக்காளிப் பழத்தில் விட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் முக அழகை பராமரிக்க பெரிதும் உதவும். தக்காளியால் முகத்திற்கு கிடைக்கும் நன்மைகள் என்ன என்பது பற்றி பார்க்கலாம்.
1.இறந்த செல்களை நீக்குகிறது
- எண்ணெய் தன்மையை நீக்க உதவும்
3.முகப்பருவைத் தடுக்கிறது
- சருமத்தில் உள்ள துளைகளை நீக்க உதவும்
- சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்கிறது
- வெயில் காலத்தில் முகத்தில் ஏற்படும் கருமையை நீக்குகிறது
- சருமத்தில் ஏற்படும் எரிச்சலை போக்க உதவும்
- சருமத்திற்கு பொலிவைத் தருகிறது
9.வயதான அறிகுறிகளை நீக்க உதவும்
- சருமத்தை ஈரப்பதத்துடன் வைக்க உதவும்
1.இறந்த செல்களை நீக்குகிறது
சுற்றுச்சூழல் மிகவும் மாசுபட்டிருப்பதால் ஒவ்வொரு முறையும் நீங்கள் வெளியே செல்லும்போது உங்கள் தோல் அழுக்கு மற்றும் எண்ணெயை உறிஞ்சிவிடும். இதன் காரணமாக தோல் பாதிக்கப்படுகிறது.அழுக்குகள் முகத்தில் உள்ள துளைகளை அடைக்கிறது. இந்தப் பிரச்னைகளுக்கு தக்காளி ஒரு சிறந்த தீர்வளிக்கும். முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க தக்காளி பெரிதும் பயன்படும். தக்காளியை(Tomato) அரைத்து, அந்த கலவை முகத்தில் தேய்த்து வந்தால் முகம் பொலிவாக மாறும்.
-
எண்ணெய் தன்மையை நீக்க உதவும்
ஆயில் ஸ்கின் இருப்பவர்களுக்கு தக்காளி சிறந்தது. தக்காளி முகத்தில் உள்ள எண்ணெய் தன்மையை நீக்குகிறது.தக்காளியை இரண்டு பகுதிகளாக வெட்டிய பின், ஒரு துண்டை எடுத்து உங்கள் முகத்தில் நன்கு தேய்த்து, 10-15 நிமிடங்களுக்குப் பிறகு தண்ணீரில் கழுவினால் மென்மையான மற்றும் எண்ணெய் இல்லாத சருமம் கிடைக்கும்.
3.முகப்பருவைத் தடுக்கிறது
முகப்பரு பொதுவாக சருமத்திலுள்ள அழுக்கு, படிந்திருக்கும் எண்ணெய் மற்றும் பாக்டீரியா காரணமாக ஏற்படுகிறது. தக்காளியில் விட்டமின் ஏ ,விட்டமின் சி மற்றும் விட்டமின் கே ஆகிய சத்துக்கள் உள்ளன. மேலும் அமிலத்தன்மையும் தக்காளியில் உள்ளது. சருமத்தில் சரியான பிஹெச் அளவை பராமரிக்க தக்காளி பெரிதும் பயன்படும்.தக்காளி(Tomato) முகத்தில் உண்டாகும் பருக்களை போக்க பெரிதும் உதவும்.
-
சருமத்தில் உள்ள துளைகளை நீக்க உதவும்
சருமத்தில் துளைகள் இருக்கும்போது , அவை தூசி மற்றும் அழுக்கு போன்றவற்றை சருமத்தில் படிய செய்கிறது. தக்காளி சருமத்திலுள்ள துளைகளை நீக்க பெரிதும் பயன்படும். ஒரு ஸ்பூன் தக்காளிச் சாற்றுடன் இரண்டு அல்லது மூன்று துளி எலுமிச்சை சாற்றை சேர்க்க வேண்டும். பின்பு அவற்றை முகத்தில் தேய்த்து, 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வர முகத்தில் உள்ள துளைகள் நீங்கும்.
-
சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்கிறது
வெயிலில் வெளியே செல்லும் போது முகத்தில் சிவப்பு புள்ளிகள் மற்றும் அரிப்பு போன்றவை ஏற்படலாம்.தக்காளியில் உள்ள லைகோபீன் புற ஊதா கதிர்களின் தீங்கு விளைவிக்கும் விளைவுகளிலிருந்து உங்களைப் பாதுகாக்கிறது. இரண்டு ஸ்பூன் தக்காளிச் சாற்றுடன், இரண்டு ஸ்பூன் தயிர் கலந்து நன்றாக கலக்க வேண்டும். பின்னர் அந்த கலவையை முகத்தில் தேய்க்க வேண்டும். பின்னர் 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவ வேண்டும்.இவ்வாறு செய்து வர சூரிய ஒளியினால் சருமம் பாதிக்கப்படுவதை தடுக்கலாம்.
-
வெயில் காலத்தில் முகத்தில் ஏற்படும் கருமையை நீக்குகிறது
வெயில் காலத்தில் முகத்தில் ஏற்படும் அரிப்பு , வெடிப்புகள், கரும்புள்ளிகள், சிவப்பு புள்ளிகள், முகத்தில் ஏற்படும் கருமை ஆகியவற்றைப் போக்க தக்காளி பெரிதும் பயன்படும். வெயிலினால் உடலில் ஏற்படும் வேனிற் கட்டியை போக்க தக்காளி உதவும்.
-
சருமத்தில் ஏற்படும் எரிச்சலை போக்க உதவும்
சருமத்தில் ஏற்படும் எரிச்சல் மற்றும் அரிப்பு போன்றவற்றை சரிசெய்ய தக்காளி பெரிதும் உதவும்.தக்காளியில் பீட்டா கரோட்டின், வைட்டமின் சி மற்றும் விட்டமின் ஈ போன்ற பல அழற்சி எதிர்ப்பு சேர்மங்கள் உள்ளன. தக்காளி சருமத்தை மென்மையாக்க பெரிதும் பயன்படும். வெள்ளரிக்காய் சாற்றுடன் தக்காளி சாற்றை கலந்து முகத்தில் பயன்படுத்தி வர முகத்தில் ஏற்படும் அரிப்பு மற்றும் எரிச்சல் நீங்கும்.
-
சருமத்திற்கு பொலிவைத் தருகிறது
எல்லோரும் சருமம் பொலிவாக இருக்க வேண்டுமென்று விரும்புவார்கள்.தக்காளியில் உள்ள கொலாஜன் ,சருமம் வயதாவதை தடுத்து என்றும் இளமையுடன் பொலிவாக இருக்க பெரிதும் பயன்படும். ஒரு ஸ்பூன் தக்காளிச் சாற்றுடன், ஒரு ஸ்பூன் முல்தானிமட்டி மற்றும் சிறிதளவு புதினா சாறு கலந்து நன்றாக கலக்க வேண்டும். பின்னர் அந்த கலவையை முகத்தில் பயன்படுத்தி ,15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வர சருமம் பொலிவுடன் மின்னும்.
9.வயதான அறிகுறிகளை நீக்க உதவும்
முகத்தில் உண்டாகும் கரும்புள்ளிகள், கருவளையங்கள், சரும சுருக்கங்கள் போக்க தக்காளி பெரிதும் உதவும். தக்காளியில் உள்ள விட்டமின் பி சருமம் வயதான தோற்றம் அடைவதை தடுக்க உதவும். தக்காளிச் சாற்றுடன் சிறிதளவு தேன் சேர்த்து முகத்தில் தேய்க்கவும். பின்னர் 15 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வர சருமம் வயதான தோற்றத்தை அடையாமல் பாதுகாக்கலாம்.
-
சருமத்தை ஈரப்பதத்துடன் வைக்க உதவும்
தக்காளி சருமத்தை ஈரப்பதத்துடன் வைக்க பெரிதும் பயன்படும். வறண்ட சருமம் உடையவர்களுக்கு தக்காளி சிறந்த தீர்வளிக்கும். தக்காளியை முகத்திற்கு பயன்படுத்தி வர முகம் மென்மையாகவும், பொலிவாகவும் மாறும்.
Content disclaimer
Content on this website is provided for information purposes only.Tamilneithal.com is not responsible for the accuracy, completeness, suitability, or validity of any information on this article. All information is provided on an as-is basis. The information, facts, or opinions appearing in the article do not reflect the views of Tamilneithal and Tamilneithal does not assume any responsibility or liability for the same