ரஜினி மக்கள் மன்றம் பரபரப்பு அறிக்கை
ரஜினிகாந்த்(Rajinikanth) அரசியலுக்கு வர வேண்டும் என்பதை வலியுறுத்தி ரஜினி மன்ற நிர்வாகிகள் யாரும் போராட்டம் நடத்தக்கூடாது என்றும் அதற்காக நிதி வசூல் செய்யக்கூடாது என்றும் தலைமை ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி சுதாகர் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்
அரசியலில் ஈடுபட முடியாது என்று நடிகர் ரஜினிகாந்த்(Rajinikanth) அறிக்கை கொடுத்த பின்னரும் அவரை அரசியலுக்கு வர சொல்லி போராட்டங்கள் நடத்துவது நியாயமற்றது என்று ரஜினி மன்றம் கண்டித்துள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் ஜனவரியில் அரசியல் கட்சி தொடங்குவதாக கூறியிருந்தார்.அதற்குள் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அவர் ஒப்புக்கொண்ட அண்ணாத்த படப்பிடிப்பின்போது படக் குழுவில் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனையடுத்து ரஜினிகாந்த் தன்னைத் தனிமைப் படுத்திக் கொண்டு கொரோனா சோதனையும் செய்துகொண்டார்.
இதனையடுத்து டிசம்பர் இறுதி வாரத்தில் அவரது உடல் நிலையை கருத்தில் கொண்டு தனது அரசியல் முடிவை மாற்றிக்கொண்டார்.உடல்நிலை பிரச்சினை இருப்பதை காரணம் காட்டி அரசியலுக்கு வரவில்லை என்பதை திட்டவட்டமாக அறிவித்திருந்தார் மற்றும் மக்களிடமும் மன்ற நிர்வாகிகளிடமும் அவர் மன்னிப்புக் கோரியிருந்தார்.
ரசிகர்கள் போராட்டம்
இந்த நிலையில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்த்திருந்த ரசிகர்கள் பலரும் ரஜினிகாந்தை(Rajinikanth) அரசியலுக்கு வர வேண்டும் என்று வலியுறுத்தி சிறுசிறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.இன்னிலையில் இந்தப் போராட்டங்களை ஒருங்கிணைத்து மாநிலம் தழுவிய அளவில் பெரிய போராட்டங்களை நடத்துவது என்று சில ரஜினி ரசிகர்கள் திட்டமிட்டிருந்தார்கள்.
ரஜினி மக்கள் மன்றம் அறிக்கை.
இன்னிலையில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி வி எம் சுதாகர் அறிக்கையில்
ரஜினி ரசிகர்கள் மற்றும் ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்களுக்கு, வணக்கம் ,நமது தலைவர் தன்னுடைய உடல்நிலை குறித்தும் ,மருத்துவர்கள் ஆலோசனை மீறியும் அரசியலுக்கு வந்தால் படக் கூடிய பாதிப்புகள் மூலம் தன்னை நம்பி வரும் மக்கள் துன்பப் படக்கூடாது என்ற நல்லெண்ணத்தின் படி தான் அரசியலுக்கு வர முடியாத சூழ்நிலை குறித்து நம் அன்புத் தலைவர் தெளிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதன் பின்னரும் அவரை அரசியல் கட்சி தொடங்க சொல்லி கட்டாய படுத்துவதற்காக போராட்டங்களில் ஈடுபடுவதாக ரசிகர்கள் பேசிவருவது அவரை மேலும் நோகடிக்கும் செயல். இப் போராட்டத்திற்காக சிலர் நிதி வசூல் செய்வது தெரிகிறது இது மிகவும் வருத்தத்துக்குரியது.
நம் தலைவரின் மீது அன்பும் அவர் நலனில் அக்கறையும் கொண்ட ரஜினி மக்கள் மன்ற ரசிகர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாமென தலைமை ரஜினி மக்கள் மன்றம் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.