முட்டை:
பளிங்கு போன்ற முகம் பெற வேண்டும் என்று தான் அனைவருக்கும் விருப்பமாக இருக்கும். ஆனால் வயதின் காரணமாகவோ அல்லது ஹார்மோன்களின் காரணமாகவோ முகத்தில் ஏற்படக்கூடிய பருக்களால் , பளிங்கு போன்ற சருமம் கிடைக்காமல் போய்விடும். நம் வீட்டில் இருக்கக் கூடிய இந்த பொருளை பயன்படுத்தினாலே நம் முகம் வலுவலுப்பாகவும், அழகாகவும் திகழும்.
பளிங்கு போன்ற சருமத்தை பெறுவதற்கு உபயோகப்படுத்தக்கூடிய பொருள் தான் முட்டை. முட்டையில் இருக்கும் வெள்ளை கருவை மட்டும் 1 ஸ்பூன் எடுத்து பவுலில் போட்டு நன்றாக கலந்து கொள்ள வேண்டும். முகத்தை நன்றாக கழுவி விட்டு ஈரம் இல்லாமல் துடைத்து விட வேண்டும். பிறகு வெள்ளை கருவை கீழிருந்து மேல் நோக்கியவாறு முகத்தில் தடவி விட வேண்டும். அரை மணி நேரம் அப்படியே விட்டு விட வேண்டும்.வெள்ளை கருவானது காய ஆரம்பிக்கும் பொழுது அது ஒரு வித இறுக்கத்தை முகத்தில் ஏற்படுத்தும். இவ்வாறு ஏற்படுத்துவதன் மூலம் முகத்தில் இருக்கக்கூடிய பெரிய துவாரங்கள் சுருங்க ஆரம்பிக்கும். அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தை நன்றாக கழுவ வேண்டும். வெறும் தண்ணீரை பயன்படுத்தி தான் கழுவ வேண்டும். சோப்பு, ஃபேஸ் வாஷ் போன்ற எதையும் பயன்படுத்தக் கூடாது.