வால்நட் லட்டு(Walnut Laddu):
அடுப்பில் ஒரு கடாயை வைத்து 1 கப் வால்நட்டை(Walnut) போட்டு லேசாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.அதே கடாயில் 1/4 கப் துருவிய தேங்காயையும் போட்டு வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.இந்த இரண்டு பொருட்களும் நன்றாக ஆறிய, பின்பு மிக்ஸி ஜாரில் போட்டுக் கொள்ளுங்கள்.நாட்டு சர்க்கரை அல்லது 1/2 கப் வெல்லத்தை நன்றாக துருவி கொள்ள வேண்டும்
நாட்டு சர்க்கரையாக இருந்தால் அப்படியே போட்டு இரண்டு ஓட்டு ஓட்டினால் வால்நட் துருவிய தேங்காய் வெல்லம் எல்லாம் சேர்ந்து அரைபட்டு பிசுபிசுப்பு தன்மையோடு நமக்கு கிடைக்கும்.இதை அப்படியே மிக்ஸி ஜாரில் இருந்து ஒரு அகலமான பாத்திரத்தில் மாற்றி 1 ஸ்பூன் நெய் விட்டு பிசைந்து அழகாக சின்ன லட்டுக்களாக பிடித்து டப்பாவில் போட்டு வைத்துக் கொண்டால் ஒரு வாரத்திற்கு மேல் வைத்தாலும் கெட்டுப் போகாது. தினமும் ஒன்று சாப்பிடலாம். குழந்தைகளுக்கும் கொடுக்கலாம். (தேங்காயை சரியாக வறுக்க வில்லை என்ற சந்தேகம் இருந்தால் லட்டு கெட்டுப் போக வாய்ப்பு உள்ளது. பிரிட்ஜில் வைத்து ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.)