தலைமுடி கருகருன்னு அசுர வேகத்தில் வளர:
செம்பருத்தி இலை 1 மடங்கு எடுத்தீர்கள் என்றால் அதை விட பாதி அளவு கருவேப்பிலை எடுத்துக் கொள்ளுங்கள்.எடுத்த இலைகளை தண்ணீரில் ஒரு முறை சுத்தமாக அலசிய பிறகு மிக்ஸி ஜாரில் சேர்த்து பேஸ்ட் ஆக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
இப்படி அரைத்து எடுத்த பேஸ்ட்டை உங்கள் முடியின் வேர்க்கால்கள் முதற் கொண்டு முடியும் நுனிவரை நன்றாக தேய்த்து 45 நிமிடங்கள் வரை அப்படியே தலையில் இருக்க வேண்டும். பிறகு சீயக்காய் சேர்த்து தலைக்கு குளித்து விடுங்கள். இந்த பேக்கை போட்டு குளிக்கும் போது எந்த காரணத்தை கொண்டும் கெமிக்கல் கலந்த ஷாம்பை பயன்படுத்தக் கூடாது.
இதை வாரம் 1 முறை தொடர்ந்து பயன்படுத்தி வந்தாலே போதும். முடி உதிர்வு, இளநரை, முடி வெடிப்பு போன்ற பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்து முடி அடர்த்தியாகவும் ஆரோக்கியமாகவும் நீண்டு வளரும். எந்த செலவும் செய்யாமல் இந்த இரண்டு பொருள்களை வைத்து இயற்கையான முறையில் இந்த ஹேர் பேக்கை தயாரித்து பயன்படுத்தும் பொழுது நல்ல முறையில் நம் முடி வளர்ச்சி அதிகரித்து கொள்ளலாம்.