வெள்ளி கொலுசு:
ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். அதாவது கொலுசு மூழ்கும் அளவிற்கு அந்த தண்ணீர் இருக்க வேண்டும். அதை அடுப்பில் வைத்து சூடு படுத்துங்கள். தண்ணீர் சூடானதும் 1 ஸ்பூன் டீத்தூளை சேர்த்து கொதிக்க விடுங்கள். அத்துடன் 1 ஸ்பூன் ஷாம்புவை சேர்த்து கலந்து கொதிக்கும் போது உங்களுடைய பழைய கொலுசை அதில் போட்டு விடுங்கள்.இந்தத் தண்ணீரில் கொலுசு 3 நிமிடம் வரை கொதிக்க வேண்டும்.
அதன் பிறகு அடுப்பை அணைத்து விட்டு 1 ஸ்பூன் சமையல் சோடாவை அதில் சேர்த்து பிறகு மீண்டும் ஒரு 2 நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள். பிறகு அந்த தண்ணீரை ஒரு கிண்ணத்தில் வடிகட்டிக் கொள்ளுங்கள். இப்பொழுது டீ தூள் கொலுசு எல்லாம் பாத்திரத்திலே தங்கி விடும். இந்த தண்ணீர் மட்டும் வேறு கிண்ணத்தில் இருக்கும்.மறுபடியும் கிண்ணத்தில் உள்ள கொலுசை எடுத்து வடித்து வைத்திருக்கும் தண்ணீரில் போட்டு மீண்டும் 2 நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள். இந்த கொலுசு தண்ணீர் எல்லாம் ஓரளவிற்கு சூடு ஆறி கை பொறுக்கும் பதத்திற்கு வந்த பிறகு அதிலிருந்து கொலுசை எடுத்து மீண்டும் கொஞ்சமாக கொலுசின் மீது ஷாம்பு தடவி லேசாக தேய்த்து விடுங்கள்.
நாம் டிகாஷன் தண்ணீரில் கொதிக்க விட்டிருந்தால் அதன் கறைகள் இந்த கொலுசின் மீது தங்கி விடக் கூடாது. அது மட்டும் இன்றி இதுவரை செய்த ப்ராசஸ் கொலுசில் உள்ள அழுக்கு கறைகள் நீக்கும். கொலுசு பாலிஷ் போட்டது போல பளபளப்பாக மாறி விடும்.இதை செய்த பிறகு நல்ல சுத்தமான தண்ணீரில் கொலுசை அலசிய பிறகு ஒரு காட்டன் துணியில் கொலுசை துடைத்து சிறிது நேரம் ஆற வைத்து எடுத்து அதன் பிறகு அணிந்து கொள்ளுங்கள். இந்த முறையில் சுத்தம் செய்யும் போது கொலுசு எப்போதும் கடையில் புதிதாக வாங்கும் போது எப்படி இருந்ததோ அதே போல இருக்கும்.