துர்க்கை அம்மன்:
துர்க்கை அம்மன் வடமாநிலங்களில் வெகு விமர்சையாக வழிபடுகிறார்கள். நாமும் துர்க்கை அம்மனை செவ்வாய்க்கிழமை ராகு காலத்திலும், வெள்ளிக்கிழமை ராகு காலத்திலும் வழிபடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறோம். அந்த வகையில் துர்க்கை அம்மனை நாம் செவ்வாய் ஹோரையில் அவருக்கு பிடித்த ஒரு மலரை கொண்டு வழிபட்டு நம்முடைய பிரச்சனைகளை எப்படி தீர்ப்பது என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
தீராத பிரச்சனைகள் தீர:
இந்த வழிபாட்டிற்கு நமக்கு தேவையான முக்கியமான ஒரு மலர் பிச்சிப்பூ. இந்த மலரை தான் அம்மனுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். அதாவது இந்த மலரை 108 என்ற கணக்கில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். நெய்வேத்தியமாக உங்களால் முடிந்த ஏதேனும் ஒரு பொருளை செய்து வைத்து விடுங்கள். செவ்வாய்க்கிழமை துர்க்கை அம்மன் படத்திற்கு முன் விளக்கேற்றிக் கொள்ளுங்கள் இல்லை என்றால் அகலை மட்டும் ஏற்றி வைத்து படத்திற்கு முன்பாக அமர்ந்து துர்க்கை அம்மன் மந்திரங்கள் அல்லது நாம அர்ச்சனை செய்து 108 முறை இந்த பிச்சி மலர அர்ச்சனை செய்ய வேண்டும்.