ஆளிவிதை:
3 டம்ளர் தண்ணீர் எடுத்து நன்றாக சூடு படுத்திக் கொள்ளுங்கள். இந்த தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் 3 ஸ்பூன் ஆளி விதையை இதில் சேர்த்து நீங்கள் ஊற்றிய தண்ணீர் ஒரு டம்ளர் ஆக குறையும் வரை நன்றாக கொதிக்க விட வேண்டும். அதன் பிறகு அடுப்பை அணைத்து விடுங்கள். ஆளி விதை சேர்த்த தண்ணீர் ஜெல்லி பதத்திற்கு இருக்கும். இது ஓரளவிற்கு சூடாக இருக்கும் போதே நீங்கள் வடிகட்டியில் இதை தனியாக வடித்து எடுத்துக் கொள்ளுங்கள்.
ஆளி விதை கொதித்த தண்ணீர் நன்றாக ஆறும் வரை விட்டு விட்டால் அதன் பிறகு வடிகட்ட சிரமமாக இருக்கும். ஆகையால் இளம் சூடாக இருக்கும் பொழுது வடிகட்டி எடுத்து ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ளுங்கள். இந்த ஜெல்லை உங்கள் முடியின் வேர்க்கால்களில் தேய்த்து நன்றாக பத்து நிமிடம் வரை மசாஜ் செய்த பின்பு ஒரு மணி நேரம் உங்கள் தலையில் அப்படியே ஊற விடுங்கள்.அதன் பிறகு கெமிக்கல் கலந்த ஷாம்புகள் எதையும் பயன்படுத்தாமல் சீயக்காய் சேர்த்து தலைமுடியை நன்றாக அலசி விடுங்கள்.